மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் அமைதி நிலவ கூடிய அற்புத நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரபூர்வ பதவியில் இருப்பவர்கள் உடைய ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளிடம் இணக்கம் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உதியோக ரீதியான நுணுக்கங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மந்த நிலை மாறி சுறுசுறுப்பு உண்டாகும். நண்பர்களுடைய ஒத்துழைப்பு தகுந்த சமயத்தில் கிடைக்கும். குடும்பத்தில் இருக்கும் அவர்களிடையே முன் கோபத்தை குறைத்து நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு முன்கோபம் தேவையில்லாத இழப்புகளை தரும் என்பதால் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து பணியை பொறுப்புணர்வுடன் மேற்கொள்வது நல்லது. குடும்பத்தில் புதிய நபர்கள் வரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ஆரோக்கியம் மேம்படும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் முக்கிய பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைப்பதில் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பணி இடமாற்றம், ஊதிய உயர்வு போன்ற விஷயங்களில் சாதகப் பலன்கள் உண்டாகும். பிள்ளைகள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் விடாப்பிடியான முயற்சி இருந்தால் நல்லதொரு முன்னேற்றத்தை காணும் யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் எதிலும் சோம்பேறித்தனம் படாமல் சுறுசுறுப்புடன் செயலாற்றினால் ஏற்றம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை பண ரீதியான விஷயத்தில் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற மன சங்கடங்கள் உருவாகும் என்பதால் கவனம் தேவை. கூடுமானவரை குடும்பத்தில் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நன்மை தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியிட பயணங்களின் போது கவனம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். ஆரோக்கியம் மேம்படும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சகோதர சகோதரிகளுக்கு இடையேயான பிரச்சனைகள் தீரும். பெரிய மனிதர்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அரசு வழி காரியங்களில் அனுகூலம் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்ப்பதை விட அதிக லாபம் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறைய கூடுமானவரை நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. புதிய பொருள் சேர்க்கை உண்டாகும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எவ்வளவு தடைகள் வந்தாலும் அவற்றை எளிதாக சமாளிக்கும் தைரியம் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வியாபார நுணுக்கங்களை கற்றுக் கொள்ளும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுப செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி உறவு சிக்கல் தீரும். தொலை தூர இடங்களில் இருந்து நல்ல செய்திகளை பெறுவீர்கள்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனப்பக்குவம் உண்டாகும். மற்றவர்களை எளிதாக எடைபோட்டு விடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்ப்பதை விட நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருக்கும் வேண்டுதல்கள் பலிக்க இறை வழிபாடு மேற்கொள்வது நல்லது.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேற கூடிய சிறந்த நாளாக அமைய இருக்கிறது. அடிபட்ட காரியம் ஒன்று இனிதே நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சக பங்குதாரர்கள் மூலம் அனுகூல பலன் உண்டாகும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு லாபம் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் விரயங்கள் ஏற்படாமல் இருக்க கவனம் தேவை.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருக்கும் மகிழ்ச்சியான சூழல் உற்சாகத்தைக் கொடுக்கும் வகையில் அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி நன்மைகளைப் பெறுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் மீது சுமத்தப்பட்ட வீண் பழி நீங்க கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலனை பெறுவீர்கள். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். தேவையற்ற விஷயங்களை மூன்றாம் மனிதர்களை நம்பி கூறுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அமைதி தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்தால் சில இழப்புகளை சந்திக்க நேரலாம். ஆரோக்கியம் சிறக்கும்.