மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத நன்மைகள் நடக்கப்போகிறது. எந்தெந்த விஷயங்களில் நீங்கள் தடைகளை சந்தித்துக் கொண்டு இருந்தீர்களோ அந்தந்த விசயங்களில் நீங்கள் வெற்றி வாகை சூட இருக்கிறீர்கள். கணவன் மனைவி ஒற்றுமையில் விரிசல் விழாமலிருக்க விட்டுக் கொடுக்க வேண்டும். சுய தொழிலில் ஏற்றம் பெறுவீர்கள்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை அடைய கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார ஸ்தலங்களை விரிவடைய செய்யக் கூடிய சிந்தனை மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் அனுகூல பலன் கிடைக்கும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஏற்றம் தரும் அமைப்பு என்பதால் எதிலும் ஜெயிக்க போகிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பாராத சில விஷயங்களை சந்திப்பீர்கள். தொலை தூர இடங்களிலிருந்து சுபச் செய்திகள் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மெல்ல மெல்ல மறையும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சுய முடிவுகள் சாதக பலன் கொடுக்க இருக்கிறது. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் எதிர்பாராத தடைகளை சந்திக்கலாம் எனவே கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய தன்னம்பிக்கை பிறக்கும் நல்ல நாள் ஆகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் தேவையற்ற மன சங்கடங்கள் ஏற்படலாம்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முயற்சிகள் விரைவில் பலிதமாக கூடிய அமைப்பு உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத விரயங்கள் ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை. கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்துச் செல்லுதல் நலம் தரும். உத்தியோகஸ்தர்களுக்கு வாகனம் பயணங்கள் மூலம் ஆபத்து உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனதில் நினைக்கும் நபர் ஒருவரை சந்திக்க இருக்கிறீர்கள். கணவன் மனைவியிடையே தேவையற்ற வார்த்தைகளை பிரயோகிக்காமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பண ரீதியான விஷயத்தில் ஏமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விழிப்புணர்வு தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முயற்சிகளுக்கு சிலர் இடையூறாக இருக்கக் கூடும் என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து பணம் கிடைக்கும். விட்டுச்சென்ற உறவுகள் மீண்டும் உங்களை சேர்வார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இட மாற்றம் குறித்த விஷயங்களில் சாதக பலன் உண்டு.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய வேண்டுதல் பறிக்கக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் வம்பு, வழக்குகளில் சிக்கிக் கொள்ளாமல் சமயோசித புத்தியுடன் செயல் படுவது நல்லது. கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனம் போன போக்கில் செல்லாமல் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கூடுதல் உத்வேகம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும் என்பதால் உடல் சோர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனதில் இருக்கும் கேள்விகளுக்கும் விடை கிடைக்கக் கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய இடங்களுக்கு பயணிக்கும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய நட்பு வட்டம் விரிவடையும். கணவன் மனைவி இடையே இருக்கும் மன கசப்புகள் தீரும், ஒற்றுமை பலப்படும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சமூகத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். உங்களுடைய உடல் சக்தியை மற்றவர்களுக்காக பயன்படுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகள் மீது இருந்து வந்த அதிருப்தி மாறும். ஆரோக்கியம் மேம்படும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பத்தை சந்திக்கப் போகிறீர்கள். கணவன் மனைவியிடையே இருந்து வந்த விரிசல் மெல்ல மறைய ஆரம்பிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் உங்களுடைய பலத்தை அறிந்து முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பயணங்களால் அனுகூலப் பலன் உண்டு