மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஒருசில எதிர்ப்புகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உங்களுடைய பேச்சுக்கு எதிர்மறையான பேச்சுகளை, எதிராளிகள் பேசி உங்களுடைய கோபத்தை தூண்டிவிட தான் செய்வார்கள். உங்களுக்கு கொஞ்சம் பொறுமை தேவை. யார்மீதும் கோபப்படாமல் நிதானமாக சிந்தித்து செயல்பட்டால் பிரச்சினை இல்லை.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெற்றி தரக்கூடிய நாளாகத்தான் இருக்க போகின்றது. தொலைதூரத்தில் இருந்து தொலைபேசியில் ஒரு நல்ல செய்தி வரும். புதியதாக முயற்சிகளை மேற்கொள்ளலாம். சொந்தத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் பொறுமை காப்பது நல்லது.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்ததை சாதிக்க கூடிய நாளாக இருக்கப்போகின்றது. மன கவலை இல்லாமல் சந்தோஷமாக எல்லா வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். சொந்த தொழிலில் எதிர்பார்த்ததை விட லாபம் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். ஆனால் சொல்லிக்கொள்ள பெரியதாக பிரச்சனை இல்லை.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கூடுதலான கவனம் இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் அலட்சியமாக செய்யக்கூடாது. மேலதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள். தேவையற்ற தொல்லைகள் அவ்வப்போது வந்து போகத்தான் செய்யும். எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு உங்களுடைய வேலையில் கவனமாக இருந்தாலே போதும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நான் நினைத்ததை சாதிக்க கூடிய நாளாக இருக்கப்போகின்றது. கிடப்பில் போட்டு இருக்கும் வேலையை கையில் எடுங்கள். நிச்சயமாக ஒரு முடிவுக்கு வந்துவிடும். வாராக் கடன் வசூலாகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
கன்னி:
கன்னி ராசி காரர்களுக்கு இன்றைய நாள் மனநிறைவான நாளாக இருக்கப் போகின்றது. குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை சந்தோஷமாக செலவழிக்க போகிறீர்கள். நீண்ட தூர பயணம் நன்மையை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமான நாளாக இருக்கப் போகின்றது. நீங்கள் மனதில் எதை நினைத்தாலும் அதை உடனடியாக சாதிக்க போகிறீர்கள். சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. குறிப்பாக உங்களுடைய வாழ்க்கைத்துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முடிவெடுப்பதில் ஒரு சில தடுமாற்றங்கள் ஏற்படலாம். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். எதுவாக இருந்தாலும் நாளை தள்ளிப் போடுங்கள். கொடுக்கல்-வாங்கலில் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகமாக இருக்கப்போகின்றது. யாரைக் கண்டும் பயப்பட மாட்டீர்கள். யார் என்ன நினைத்துக் கொண்டாலும் பரவாயில்லை. மனதில் நினைப்பதை பட்டென்று பேசி நல்ல பெயர் வாங்கிக் கொள்வார்கள். அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் தான் இன்னைக்கு வீசும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கப்போகின்றது. குடும்பத்தில் உறவினர்களின் வருகை இருக்கும். சுபச்செலவுகள் ஏற்படும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். இந்த மாதம் சம்பளம் வந்த பிறகு எல்லாம் சரியாகிவிடும். வியாபாரத்தில் லேசான மந்தமான சூழ்நிலை காணப்படும். வேலை செய்யுமிடத்தில் முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்கக்கூடிய நன்னாளாக அமையப்போகின்றது. பிள்ளைகளால் மன மகிழ்ச்சி ஏற்படும். வீட்டில் உறவினர்களின் வருகை இருக்கும். சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் குவியும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சற்று அலைச்சல் நிறைந்த நாளாக தான் இருக்கப்போகின்றது. வீட்டு வேலை அலுவலக வேலை என்று கொஞ்சம் குழப்பம் இருக்கும். விடுமுறை நாள் என்பதால் கொஞ்சம் சோம்பேறித்தனத்தோடு இருப்பீர்கள். இருப்பினும் பிரச்சனைகள் உங்களை விடாது. பெரிய அளவில் பாதிப்புகள் வருவதற்கு வாய்ப்பில்லை. ஆனால் பிக்கல் பிடுங்கல் இருக்கும்.