மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் செய்யும் செயல்களில் வெற்றி காண கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. சுயதொழிலில் இருப்பவர்களுக்கு உறுதியான தைரியம் வழிகாட்டும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சீரான சூழ்நிலை இருக்கும். குறித்த நேரத்திற்கு முன்பே உங்களுடைய வேலைகளை செய்து முடித்து விடுவீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதார்த்தமாக நடந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் பயணம் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை சற்று கவனமாக மேற்கொள்வது நல்லது. எந்த ஒரு விஷயத்தையும் அவசரப்பட்டு முடிவு எடுக்காமல் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் உங்களுடைய செயல்களை திட்டமிட்டு செய்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சில சௌகரியங்களை விட்டுக் கொடுக்க வேண்டி வரும் அசௌகரியமான சூழ்நிலை ஏற்படலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரித்து காணப்படும் இதனால் சோர்வுடன் காணப்படலாம். குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க தாமதம் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுமுகமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புத்துணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் பங்கு கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களுடன் இணக்கம் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நாள் சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் நடக்கும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திருப்தியான நாளாக இருக்கும். வேலை தொடர்பான விஷயங்களுக்கு பயணம் மேற்கொள்வீர்கள். கணவன் மனைவி இடையே கருத்து மோதல் ஏற்படலாம் என்பதால் பேசும் பொழுது கவனமாக இருப்பது நல்லது.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கூடுமானவரை அனுசரித்து செல்வது நல்ல பலனை கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்துமுடித்து மேலதிகாரிகளிடம் பாராட்டுகளை பெறலாம். உணர்ச்சிவசப்படக் கூடிய சூழ்நிலையை தவிர்ப்பது நல்லது.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தக்கூடிய நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தேவையற்ற முன்கோபம் ஏற்படலாம் என்பதால் பொறுமையை இழக்காமல் இருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற கவலைகளை தூக்கி எறிவது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வரவுக்கு மீறிய செலவுகள் அதிகரிக்கும் என்பதால் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு குறைந்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு முன்னேற்றம் காணலாம். சகோதரர்களுடன் நல்லுறவை வளர்ப்பது நல்லது.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதுரியமாக செயல்படுவதன் மூலம் நல்ல முன்னேற்றம் காணலாம். சுபகாரிய முயற்சிகளில் ஏற்பட்டுக்கொண்டிருந்த தடைகள் விலகும். கணவன் மனைவி இடையே இருக்கும் ஊடல்கள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பேச்சுவார்த்தையில் கவனம் தேவை. வேலை தொடர்பான ரகசியங்களை வெளியிடாமல் இருப்பது நல்லது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் எதையும் ஒருமுறைக்கு பல முறை ஆலோசனை செய்து கொள்வது நல்லது.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல பலன்கள் கிடைக்க கூடிய அற்புதமான நாளாக இருக்கிறது. சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நிதானம் தேவை. அவசரமாக எந்த ஒரு வேலையையும் செய்யாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிலும் கட்டுப்பாடு தேவை. மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சகோதர சகோதரர்களுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மந்தமான சூழ்நிலை நிலவக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் திட்டமிட்டு செயல்பட கூடிய நாளாக இருக்கும். தேவையற்ற இழப்புகளை சந்திக்கலாம் என்பதால் கூடுமானவரை வார்த்தைகளில் அக்கறை கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அசௌகரியமான சூழ்நிலை காணப்படும். தேவையற்ற பயணங்களை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான நல்ல பலன்கள் கிடைக்க கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மனது தெளிவாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும். எடுக்கும் முயற்சிகளுக்கு பாராட்டுகள் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.