மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான நல்ல பலன்கள் உண்டாகக் கூடிய நாளாக இருக்கிறது. எனவே நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றி அடையும். சுபகாரியத் தடைகள் விலகும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு புது உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் ஜெயம் நிச்சயம். தொலை தூர இடங்களிலிருந்து மனதிற்கு பிடித்தவர்கள் நல்ல செய்திகளை கொடுப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்க இருக்கும் புதிய முடிவுகளுக்கு நல்ல வரவேற்பு காத்திருக்கிறது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு பணி சுமை கூடும் எனினும் சோர்வில்லாமல் இருப்பீர்கள்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் ஆடம்பரத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நன்மைகள் நடக்கும். பணப்புழக்கம் கையில் அதிகரித்தாலும் சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் பெருகும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் பொருளாதார ரீதியான ஏற்றம் காண இருக்கிறீர்கள் என்பதால் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை பலப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய உத்திகள் தோன்றும். உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லைகள் குறையும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது வேறொன்றாக நடக்க வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது மன வலிமையை அதிகரிக்க செய்யும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதக பலன் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கவன சிதறல் ஏற்படும் என்பதால் எச்சரிக்கை தேவை. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தடைகளை தாண்டி முன்னேறும் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெளியிட பயணங்களின் போது கவனம் தேவை. தேவையற்ற மூன்றாம் மனிதர்களிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் பொருளாதார ரீதியான முன்னேற்றத்தை காண இருக்கிறீர்கள். உங்களுடைய விடா முயற்சிக்கு வெற்றி கிடைக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முன்கோபத்தை தவிர்ப்பதன் மூலம் நிம்மதி கிடைக்கும். குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்து செல்லுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்கள் இடத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் போக்குவரத்து தொடர்பான விஷயத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமைக்கு குறைவிருக்காது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகம் பொறுமை தேவை. உங்களுடைய கோரிக்கைகளை துணிச்சலாக முன் வைப்பது நல்லது.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தொட்டதெல்லாம் ஜெயமாகும் நல்ல நாளாக இருக்கிறது. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுப செய்திகளை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் பல தடைகளை தாண்டி தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த தடைகள் மறையும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனம் மகிழும் படியான நல்ல நிகழ்வுகள் நடக்கும். குடும்பத்தில் சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீர்வுக்கு வரும். கணவன் மனைவி ஒற்றுமையில் மற்றவர்களுடைய கண்பார்வை விடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அமோகமான லாபம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு வேண்டிய பிரார்த்தனைகள் நிறைவேறும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்த சில விஷயங்கள் எதிர்பார்த்த படி நடக்க வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி உறவுக்கு இடையே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சாமர்த்தியம் தேவை. உடனிருப்பவர்களே உங்களுக்கு எதிராக செயல்படக் கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டு.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் கவலையுடன் காணப்படுவீர்கள். உங்களைப் புரிந்து கொள்ளாத சிலர் புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள். குடும்பத்தில் மூத்தவர்கள் இடம் அனுமதி கேட்டு எந்த ஒரு முடிவையும் எடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபார முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். கையில் பணப்புழக்கம் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நேர்மறையாக சிந்திக்கும் திறன் அதிகரிக்கும்.