மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நாள் முன்னேற்றம் தரக்கூடிய நாளாக அமையப்போகின்றது. புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் ஆனந்தம் பிறக்கும். வேலை செய்யும் இடத்தில், பாராட்டுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பேச்சாற்றல் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. எந்த விஷயத்தையும் சாதுரியமாகப் பேசி சாதித்து விடுவீர்கள். சிலருக்கு நீண்ட தூர பயணம் செய்ய வேண்டியதாக இருக்கும். சுபச் செய்திகள் வந்து சேரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நாள் தொட்டதெல்லாம் துலங்க கூடிய நாளாக இருக்கப் போகின்றது. வீட்டில் உறவினர்களின் வருகை இருக்கும். பிரிந்து போன கணவன் மனைவி ஒன்று சேர வாய்ப்புகள் உள்ளது. உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெற்று மன மகிழ்ச்சி அடைவீர்கள்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெற்றி தரக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. வருமானம் இருக்கும். அதை சிக்கனமாக செலவு செய்ய பழகிக் கொள்ளுங்கள். ஆடம்பர செலவு வேண்டாம். வீட்டில் இருப்பவர்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவைகள் பூர்த்தி அடையக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. மனக்குழப்பங்கள் நீங்கும். தேவைக்கேற்ப பணவரவு இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சந்தோசமாக நாளாகத்தான் இருக்கும். இருப்பினும் எல்லா விஷயத்திலும் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். உங்களுடைய பொருட்களை ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளுங்கள். வாகனம் ஓட்டும்போது கவனத்தை சிதற விடாதீர்கள்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். தர்ம சங்கடமான சூழ்நிலைகள் உங்களை நெருக்கடி செய்யும். இருந்தாலும் குறுக்கு வழியில் செல்லக்கூடாது. நேர்வழியில் உண்மையாக இருந்து, உண்மையை பேசி விட்டால் நாளை பிரச்சனை கிடையாது. பொய் சொல்லி என்று தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், அந்த ஆண்டவன் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசி காரர்கள் இன்று சந்தோஷமாக இருக்க போகிறீர்கள். உங்களுடைய எதிரிகள் உங்களிடம் இருந்து விலகி சென்றுவிடுவார்கள். நீண்டநாட்களாக தொல்லை கொடுத்துவந்த உடல் உபாதைகள் இனி கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும். சொந்தத் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. குறிப்பாக கணினி சம்பந்தப்பட்ட வேலை செய்பவர்களுக்கு இன்று அனுகூலம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் நடக்கும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்று மனக் கவலைகள் நீங்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த தேவையான ஐடியாக்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் இன்று துணிச்சலோடு நிறைய விஷயங்களில் நல்ல முடிவை எடுக்கப் போகிறீர்கள். நீங்கள் எடுக்கக்கூடிய முடிவு உங்களுக்கு சாதகமாக தான் இருக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் வாழ்க்கையில் உங்களை ஒருபடி முன்னேற்ற செய்யப்போகிறது.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த நாள் முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. புதிய முயற்சிகள் வெற்றி தரும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தாலும், அதை சமாளித்துக் கொள்வீர்கள். குடும்ப விஷயத்தை மூன்றாவது மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.