மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை விட சிறந்த பலன்களை அடைய இருக்கிறீர்கள். வெளியிடங்களில் நேர்மையான சிந்தனையுடன் செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நீண்ட யாத்திரை செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமைக்கு குறைவிருக்காது.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான நல்ல பலன்களை அடைய இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் உங்களுடைய சுய தேவையை விடுத்து பொதுநலமாக செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் பணிச்சுமை டென்ஷனை ஏற்படுத்தும். எதிலும் பொறுமையுடன் கையாண்டால் சிக்கல்களில் இருந்து விடுபடலாம்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் வெற்றி அடைய கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொலை தூர இடங்களில் இருந்து சுப செய்திகளை பெறுவீர்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வருமான ரீதியான உயர்வு சாதக பலன் கொடுக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் குழப்பம் நீங்கி தெளிவாக சிந்திக்க கூடிய ஆற்றம் பிறக்கும் இனிய நாளாக இருக்கும். தொலை தூர இடங்களில் இருந்து மனதிற்கு பிடித்த செய்தி ஒன்று கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கஷ்டமான வேலையும் எளிதாக முடியும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய விடா முயற்சியை கை விடாமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். கிடைக்காது என்று நினைத்து ஒன்று கிடைக்க இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெளியிட பயணங்களின் பொழுது கூடுதல் கவனம் தேவை.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடமையில் கூடுதல் அக்கறையுடன் இருப்பீர்கள். வீட்டுத் தேவைகளை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பொருளாதாரம் ஏற்றம் காணும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நீண்டநாள் இழுபறியில் இருந்து வந்த வேலைகள் முடிந்துவிடும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உற்சாகத்துடன் செயலாற்றக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. உங்களை புரிந்து கொள்ளாமல் சென்ற சிலர் உங்களைத் தேடிவரும் வாய்ப்பு உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கவனக் குறைவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே எச்சரிக்கை தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொருட் சேர்க்கை ஏற்படும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் புதுப்பொலிவுடன் காணப்படுவீர்கள். பெற்றோர்களின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் நிதானமாக இருப்பது நல்லது. அவசரம் ஆபத்தை தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மந்த நிலை காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் இருந்து வந்த இடையூறுகள் நீங்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் கவலைகள் நீங்கி புது பொலிவுடன் காணப்படுவீர்கள். உங்கள் மனதை அரித்துக் கொண்டிருந்த கேள்விகளுக்கு விடை கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரிகளுக்கு நன்மைகள் அதிகரிக்கும். வெளியிட போக்குவரத்தில் கவனம் செலுத்துங்கள். முன்பின் தெரியாதவர்களின் அறிமுகம் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு வேகத்தை விட விவேகம் அவசியம்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனதில் நினைத்த காரியம் ஒன்று நடக்க இருக்கிறது. தடைபட்டுக் கொண்டிருந்த சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் இரட்டிப்பாகும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு முன்கோபத்தை தவிர்ப்பதன் மூலம் பல இழப்புகளை கட்டுப்படுத்தலாம்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு பல இடையூறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. துறைசார் நிபுணர்களின் ஆலோசனை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டு. சகோதரர்கள் வழியில் உதவி கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் பலன்தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை காணப்படும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஒன்று நினைக்க, அது ஒன்று நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மந்த நிலை காணப்பட்டாலும், பொருட் தேக்கம் ஏற்படாது. கணவன் மனைவியிடையே பேசும் வார்த்தையில் இனிமை தேவை. சிறு சிறு ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் வந்து மறையும். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகள் தொந்தரவு கொடுக்கலாம்