மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான நல்ல பலன்கள் கொடுக்கக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரம் நிதானமாக நடக்கும். உழைப்பாளிகளுக்கு உரிய சன்மானம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். உற்றார்கள் மற்றும் நண்பர்களின் ஊக்குவிப்பு உங்களுக்கு கிடைக்கும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் டென்ஷனாக காணப்படக்கூடிய நாளாக இருக்கிறது என்பதால் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வேளையில் தேவையற்ற இடையூறுகள், குறுக்கீடுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதையும் பொறுமையாக கையாளுவது நல்லது. எதிர்காலம் பற்றிய கவலை மேலோங்கி காணப்படும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு மற்றவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உடனிருப்பவர்களே பல சூழ்ச்சிகளை புரியக் கூடும் என்பதால் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நேரத்தின் மீது கவனம் தேவை. ஆரோக்கியம் மேம்படும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வெளியூர் பயணங்களை மேற்கொள்ள கூடிய வாய்ப்புகள் உண்டு என்பதால் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சில ஏமாற்றங்கள் வந்து செல்லும் எனவே எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி தொடர்பான அலைச்சல் ஏற்படும் என்பதால் நிதானத்துடன் இருப்பது நல்லது.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற கோபம் வரக் கூடும் என்பதால் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உங்களுடன் இருப்பவர்களே உங்களுடைய கோபத்தை தூண்டி விடுவார்கள். எதையும் சாமர்த்தியமாக கையால் அதனால் மன நிம்மதி பெறலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுமை தேவை. ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் நடந்து கொள்வீர்கள். தேவையற்ற பிரச்னைகளில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது. கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்துச் செல்லுதல் நலம் தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாகன ரீதியான பயணங்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் பணத்தின் மீது கவனம் கொள்ளுங்கள், பணத்தை இழக்க நேரலாம்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்ப சூழ்நிலைக்கு அனுசரித்து செல்வது நல்லது. மனதிலிருக்கும் இறுக்கமான நிலை மாறும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகளை அடைவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி அடையலாம். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்யாமல் இருங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய நட்புகள் மலர வாய்ப்புகள் அமையும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துணிச்சலான முடிவுகளை எடுக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் ஆதாயம் காணும் யோகம் உண்டு. பெண்களுக்கு செய்யும் வேலையில் சாதக பலன் உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எந்த ஒரு விஷயத்திலும் பொறுமை காப்பது நல்லது. சாதம் சாதகமற்ற அமைப்பு என்பதால் இடையூறுகள் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் பல தடைகளை தாண்டி வெற்றி பெறக் கூடிய நல்ல நாளாக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் என்பதால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவியிடையே அக்கறை தேவை.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய உழைப்பை கூடுதலாக கொடுக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் புதிய முதலீடுகள் செய்வதற்கு நல்ல நாளாக இருக்கும். கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகளை உண்டாக்கி கொள்ளாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணக்கமாக செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாக இருக்கும். புதிய உத்திகளைப் புகுத்தி வெற்றி காணலாம். உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் நட்புறவாக சந்தர்ப்பங்கள் உருவாகும். பெண்களுக்கு சிக்கனம் தேவை.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அரசு வழி காரியங்கள் அனுகூல பலன் கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சனைகள் நீங்கி சமரசம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு தேவையில்லாத அலைச்சல் ஏற்படும். எந்த காரியத்திலும் அவசரப்படாமல் இருப்பது நல்லது. பெண்கள் வீண் கவலையை விட்டுவிட்டு வேலையில் கவனம் செலுத்துவது நல்லது.