மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய அனுபவம் கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அனுகூலம் தரும் அமைப்பாக இருப்பதால் வெற்றி மேல் வெற்றிகள் வந்து குவியும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளிடம் இணக்கம் தேவை. ஆரோக்கியம் சீராகும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பேச்சுவார்த்தையில் இனிமை தேவை. எதையும் கராராக பேசி முடிவு எடுக்க வேண்டாம். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சுய தொழிலில் எதிர்பாராத வகையில் சில நிகழ்வுகள் நடைபெறலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் வந்து சேரும் எனவே முன்னெச்சரிக்கை தேவை.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் பொருளாதார ரீதியான சிக்கல்களை சந்திக்க வாய்ப்புகள் உண்டு. எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரவு கிடைப்பதில் கால தாமதம் ஆகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை. கணவன் மனைவியிடையே சிறு சிறு மன சங்கடங்கள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புணர்வு கூடுதலாக தேவை.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடமையிலிருந்து பின்வாங்காமல் இருப்பது நல்லது. குடும்ப பொறுப்புகள் சுமக்க வேண்டி இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமைக்கு இடையூறுகள் ஏற்படலாம். வெளி வட்டார போக்குவரத்துகளில் கவனம் தேவை. சுய தொழிலில் திடீர் லாபம் வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிறு சிறு முயற்சிகளுக்கு பலரும் பக்க துணையாக இருந்து உதவி செய்வார்கள். கணவன் மனைவியிடையே நடக்கும் பேச்சு வார்த்தைகளை பற்றி வெளியில் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சுபகாரிய விஷயங்களில் அலைச்சல் ஏற்படலாம். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பங்குதாரர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நன்மைகள் நடக்கும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். தேவையற்ற எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. பூர்வீக சொத்து தகராறுகள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்களுக்கு தீர்வு காணக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. சுயதொழிலில் உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு அமைதி தேவை.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய புதிய விஷயங்களுக்கு நல்ல ஒரு ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பனிப்போர் நீங்கும். வெளியிட பயணங்களின் பொழுது உடைமை மீது கவனம் தேவை. சுய தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண அலைச்சல் ஏற்படலாம் இதனால் பணி சுமை கூடும். ஆரோக்கியம் மேம்படும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் விரும்பிய விஷயங்களை அடைவதில் இடையூறுகள் ஏற்படலாம். எதிலும் பொறுமையாக இருந்து காரியத்தை சாதித்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பழைய பாக்கிகள் வசூலாக கூடிய வாய்ப்புகளும் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இதுவரை இருந்து வந்த வீண் பழிகள் மறையும் வாய்ப்பு உண்டு.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுமை தேவைப்படக்கூடிய நாளாக இருக்கிறது. தேவையற்ற வார்த்தைகளை உதிர்க்க வேண்டாம். குடும்பத்தில் பெரியோர்களின் ஆசி பெறுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தொலைந்த விஷயங்களும் திரும்ப கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பணம் தொடர்பான விஷயத்தை கையாளுவதில் கவனம் தேவை. ஆரோக்கிய பாதிப்புகள் குறையும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனம் மகிழும் படியான நிகழ்வுகள் நடைபெறும். கணவன் மனைவிக்கு இடையே அன்னோனியம் கூடும். தொலைதூரப் போக்குவரத்து விஷயங்களில் கவனம் தேவை. அனாவசிய வீண் அலைச்சல்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் சமயோஜித புத்தியுடன் செயல்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நிதானம் தேவை.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் ஆதாயம் காணக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ள நீங்கள் எதையும் சாதிக்க கூடிய ஆற்றல் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே நடக்கும் வாக்குவாதங்களில் கவனம் தேவை. விட்டு சென்ற உறவுகள் உங்களை தேடி வர வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் சாதிக்க கூடிய ஆற்றல் உங்களுக்கு காணப்படும். நேர்மறையான சிந்தனை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அனுபவ பூர்வமான அறிவு அதிகரித்து காணப்படும். கணவன் மனைவி இடையே விரிசல் வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு எனவே தேவையற்ற விஷயங்களைப் பற்றிய அலசல் வேண்டாம். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.