மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரும் நல்ல பலன்கள் உண்டு. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு நீங்கும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு நிதானம் தேவை. பேச்சில் கடுமை இருந்தால் தேவையற்ற இழப்புக்களைச் சந்திக்க நேரலாம். ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் குறையும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய பலன்களை தரக்கூடிய அமைய இருக்கிறது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படும் வாய்ப்புகள் அமையும். உங்கள் திறமையை நிரூபிக்க வேண்டிய நேரம் இது.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் தரும் அமைப்பாக உள்ளது. எதிர்பாராத வகையில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சுய தொழிலில் எதிர்பார்த்ததை விட லாபம் இரட்டிப்பாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்டநாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கடுமையான சில எதிர்ப்பை சந்திக்க நேரலாம். ஒரு சிலருக்கு புதுமையான விஷயங்களில் ஈடுபடும் யோகம் உண்டு. கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பண விஷயத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அலைச்சல் ஏற்படலாம்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவி இடையில் இருக்கும் ஒளிவு மறைவை நீக்குவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பெருக கூடுதல் முயற்சி செய்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணி சுமை மேலும் அதிகரிக்கும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறந்த நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த கருத்து மோதல் நீங்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்தடைய வாய்ப்புகள் வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்களுடைய கருத்துக்களை முன்வைப்பதில் தயக்கம் காட்டத் தேவையில்லை.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திடீர் முடிவுகள் எடுப்பதில் கவனம் செலுத்துங்கள். அவசர முடிவுகள் ஆபத்தை ஏற்படுத்தலாம். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் வந்து மறையும். மூன்றாம் நபர்களை நம்பி புதிய ஒரு பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியம் சீராகும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் வெளியிட பயணங்களின் பொழுது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையகப்படும். வேலையில்லாதவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த நாள் தடைகளை மீறிய துணிச்சல் ஏற்படும். எவ்வளவு பேர் உங்களை எதிர்த்து நின்றாலும் நியாயத்துக்காக போராடுகிறார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய முடிவுகள் குழப்பத்தை ஏற்படுத்தலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி அதிக லாபம் காணலாம்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரக்கூடிய அமைப்பு என்பதால் நீங்கள் எதிலும் வெற்றியைக் காணலாம். தொலை தூர இடங்களிலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படலாம் என்பதால் கூடுமானவரை விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன அமைதி இருக்கும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் பொருளாதார ரீதியான முன்னேற்றம் உண்டாகும். வரவுக்கு மீறிய செலவு ஏற்படாமலிருக்க செலவைக் கட்டுக்குள் அடக்குவது நல்லது. புதிய தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிதானம் தேவை.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தொலை தூர இடங்களில் இருந்து வரக்கூடிய செய்திகள் மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கும். முன்பின் தெரியாதவர்களின் அறிமுகம் தவிர்ப்பது உத்தமம். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளியிட பயணங்கள் மூலம் அனுகூல பலன் உண்டு.