மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் சிறப்பாக அமையும். வாழ்க்கைத் துணையால் ஆதாயம் ஏற்படும் . தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். ஒரு சிலருக்கு சுப காரியங்களுக்காக செலவு செய்யும் நிலை இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். அரசாங்க ரீதியான காரியங்களில் சிறிது தாமதங்கள் ஏற்படும். பிறருடன் வீண் விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவார்கள். குழந்தைகளால் வீட்டில் மகிழ்ச்சி பெருகும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் மகிழ்ச்சியான நாள். வியாபாரங்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் எதிலும் ஈடுபட வேண்டாம். பணியிடங்களில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். ஒரு சிலர் குடும்பத்தினருடன் வெளியில் சென்று வருவீர்கள்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் எதிர்பாராத பண வரவுகள் உண்டு. உடல்நலத்தில் அக்கறை கொள்ள வேண்டும். சிலருக்கு பெற்றோர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும். வெளியூர், வெளிநாடு சம்பந்தமான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் பிறருடன் பிரச்சனைகளை தவிர்ப்பது நல்லது.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் நண்பர்களால் அனுகூலங்கள் உண்டாகும். சிலருக்கு உடல் அசௌகரியங்கள் ஏற்பட்டு நீங்கும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு சிறிது தடை ஏற்பட்டு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. அரசாங்க ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் பெரிய லாபம் இல்லை என்றாலும் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். பெண்கள் வகையில் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எடுக்கும் காரியங்களில் சிறப்பான வெற்றி கிடைக்கும். உத்தியோகம் செய்பவர்கள் சக ஊழியர்களிடம் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். சிலருக்கு தாய் மாமன் வழியில் அனுகூலங்கள் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கல்கள் திருப்திகரமாக இருக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும். சில பெரிய மனிதர்களால் நன்மை ஏற்படும். சிலர் தொழில், வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள். கலைஞர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும். ஒரு சிலர் ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்வார்கள். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் மனதில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகம் செய்பவர்களுக்கு பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வீட்டில் இருப்பவர்களுக்கு தேவையானதை வாங்கித் தந்து மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களால் எதிர்பார்த்த லாபம் இருக்காது.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் மனதில் உற்சாகம் கூடும். எடுத்த காரியங்களில் சிறப்பான வெற்றியைப் பெறுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பண வரவுகள் உண்டாகும். வீட்டில் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். கடன் சம்பந்தமான விடயங்களில் கவனமாக செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்மானம் உண்டு. ஒரு சிலருக்கு வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். உடல் உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பணியிட மாற்றம், பதவி உயர்வு பெறுவார்கள். குடும்பத்தில் பிறருடன் வீண் விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். புதிய நபர்களால் ஆதாயம் உண்டு.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் உடல், மன ரீதியாக சற்று சோம்பல் தன்மை இருக்கும். குழந்தைகளுக்கு வேண்டியவற்றை வாங்கித் தந்து மகிழ்வீர்கள். சிலர் தமக்கு கீழே பணி புரியும்பணியாளர்களால் நல்ல ஆதாயம் பெறுவார்கள். ஒரு சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவார்கள். வீட்டில் இருப்பவர்களின் உடல்நலத்தில் அக்கறை தேவை.