இன்றைய ராசிப்பலன் – 30-8-2021
மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்கள் இந்த நாள் அவசரமான முடிவுகளை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு உடனிருப்பவர்களே உபத்திரவமாக இருப்பார்கள். கூடுமானவரை உங்களுடைய வேலைகளை நீங்களே செய்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பேச்சில் இனிமை தேவை. குடும்பத்தில் அமைதி நிலவும். பெண்கள் தெரியாத விஷயங்களை கற்றுக் கொள்ள முனைவீர்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் இந்த நாள் எதையும் போராடித்தான் பெற வேண்டியிருக்கும். எளிதாக எதுவும் கிடைத்துவிடாது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடி நிறைவேற்றி காட்டுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற அலைச்சல், டென்ஷன் ஏற்படலாம். கணவன் மனைவிக்குள் இருக்கும் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது உத்தமம்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்கள் இந்த நாள் வாகன ரீதியான பயணங்களின் போது கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் எதையும் சாமர்த்தியமாக சமாளித்து காட்டுவீர்கள். சக போட்டியாளர்கள் வியக்கும் வண்ணம் சில விஷயங்களை செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய மாற்றங்கள் மன உளைச்சலை ஏற்படுத்தலாம். பெண்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வீர்கள்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்கள் இந்த நாள் உங்களுடைய வேலைகளை கணவனை சுறுசுறுப்புடன் முடித்துக் காட்டுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் உடைய நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு ஒரு சிலருக்கு அமையப் பெறும். குடும்பத்துடன் செலவிடக் கூடிய அற்புதமான நாளாக பெண்களுக்கு அமையும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுகு இந்த நாள் இதுவரை உங்களை சுற்றி இருந்து வந்த பகைமை மாறும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை மேலோங்கி காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மற்றவர்களுடைய மதிப்பை அறிந்து செயல்படுவீர்கள். சக கூட்டாளிகளை அனுசரித்து செல்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் அணுகுமுறை திருப்திகரமாக இருக்கும். அலுவலக ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த நாள் எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றியைக் காண்பீர்கள். மனதிற்கு பிடித்த நபர்கள் மூலம் நல்ல செய்திகளை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை மாறும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் வந்து சேரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு விட்டு சென்ற உறவுகள் மீண்டும் வந்தடைய வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி பிரச்சனைகள் தீரும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற விமர்சனங்களை காதில் போட்டுக் கொள்ளாமல் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பேச்சில் இனிமையை கடைபிடிக்க வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் அமைதி காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சில அவமானங்கள் வந்து சேர வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை கவனமுடனிருப்பது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சக போட்டியாளர்கள் உடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். புதிய யுத்திகளை கையாண்டு சிறப்பான லாபம் காண இருக்கிறீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களுடன் இணக்கம் தேவை. தேவையற்ற பகைகளை வளர்த்துக் கொள்வதை தவிர்ப்பது உத்தமம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
தனுசு:
ராசிக்காரர்களுக்கு இந்த நாள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிலும் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பழைய பாக்கிகளை சுலபமாக வசூல் செய்ய கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். வேலை தேடி அலைந்து கொண்டு இருப்பவர்களுக்கு மனதிற்குப் பிடித்த நல்ல வேலை அமைய வாய்ப்புகள் உண்டு. சகோதரிகள் வழியில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்கள் இன்றைய நாள் பணவரவு தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. எதிலும் காலதாமதமான பலன்களைக் காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்து போடுவதில் கவனமுடனிருப்பது நல்லது. தேவையற்ற அறிமுகங்களை தவிர்த்துக் கொள்வது உத்தமம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு அமைதி இருக்கும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. பொது இடங்களில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். வெளியிட பயணங்களின் பொழுது உடைமை மீது கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புணர்வு தேவை. அரசு வழி காரியங்கள் அனுகூல பலனை கொடுக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் எச்சரிக்கை தேவை.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய அனுபவம் உங்களுக்கு கைகொடுக்கும் வகையில் அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க நிதானம் தேவை. வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதக பலன் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத திடீர் பண வரவு உண்டாகும். குடும்பத்தேவைகளை எளிதாக பூர்த்தி செய்வீர்கள். கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும்.