மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுறுசுறுப்புடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்ப பிரச்சனைகள் பற்றி விவாதிப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் மற்றவர்களுடைய கவனத்தை ஈர்ப்பீர்கள். தேவையற்ற இடங்களுக்கு பயணம் செய்வதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் விஷயங்களில் சுப பலன் உண்டு.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உறுதியான முடிவுகளை எடுக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடீர் மகிழ்ச்சிப் பெருக்கு ஏற்படும். இனம் புரியா உற்சாகம் தொற்றிக் கொள்ளும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தன் தவறுகளை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமான பலன்கள் அமைய கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே உரிய சுதந்திரத்தை கொடுத்து நடந்து கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய சக்தியை தேவைப்படுபவர்களுக்கு பயன்படுத்துவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் வியூகம் சரியாக அமையும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனம் அமைதியாக இருக்கப் போகிறது. இதுநாள் வரை இருந்து வந்த இறுக்கம் தளரும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் துணையாக இருப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பயணங்கள் மூலம் அனுகூல பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சுயமாக எந்த ஒரு முடிவையும் இருப்பது நல்லது.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்ப பொறுப்புகள் அதிகரித்து காணப்படும். எதிர்பாராத இடத்தில் இருந்து பண வரவு ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு ஏற்றம் தரும் விஷயங்கள் நடக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்கள் ஒத்துழைப்பு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். ஆரோக்கிய பாதிப்புகளில் உடன் கவனிப்பு தேவை.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சமூக அக்கறை அதிகரித்து காணப்படும். மற்றவர்களுடைய துன்பத்தை தன் துன்பம் என்று நினைப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு ஆச்சரியப்படத் தக்க விஷயங்கள் நடக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் வேலை நுணுக்கங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்கள் மனதுக்கு பிடித்தவர்களிடம் அதிக நேரம் உரையாடும் வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் எதிர்பார்த்த விஷயம் ஒன்று நடக்க இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முகத்தில் புது விதமான பொலிவு தோற்றமளிக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் ஏற்படும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனதில் இருந்து வந்த நம்பிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. நடக்கவே நடக்காது என்று நினைத்த காரியம் கூட நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய உந்துகோலாக சிலர் செயல்படுவார்கள். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு கடமை உணர்வு அதிகரிக்கும். தம்பதியர் ஒற்றுமை அதிகரிக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நேரத்தை உபயோகமாக செலவழியுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். நீங்கள் நினைத்ததை அடைவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நெருங்கிய உறவுகளுக்கு இடையே சண்டை போட்டுக் கொள்ள வாய்ப்பு உண்டு என்பதால் கூடுமானவரை அமைதி காப்பது நல்லது.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திடீர் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மனதிலிருக்கும் இறுக்கம் தளர தியானம், யோகா போன்றவற்றை மேற்கொள்வது நலம் தரும். கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி புரிதல் ஏற்படும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நேர்மறையான எண்ணங்கள் உங்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும் வண்ணம் இருக்க போகிறது. தடைப்பட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் யோகம் உண்டு. கணவன் மனைவியிடையே இருக்கும் அன்பு கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை ரீதியாக ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல பலன் உண்டு.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கடமையில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது. குடும்பத்தில் பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் என்பதால் தேவைகள் பூர்த்தியடையும். கணவன் மனைவி இடையே பனிப்போர் நீங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சோர்வு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் மந்த நிலையை சமாளித்து விடுவீர்கள். ஆரோக்கியம் சீராகும்.