மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய விடியலை நோக்கிய பயணத்தில் ஆரம்பிக்க இருக்கிறது. எதிர்பார்த்தவை ஆகும் நிறைவேற கூடிய அற்புதமான அமைப்பாகும். தேவையற்ற விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். மேலதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள். ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டாதீர்கள்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எடுக்கக்கூடிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாகத்தான் அமையும். புதிய கனவுகளை வளர்த்துக் கொள்வீர்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் நன்மைகள் நடக்கும். லாபம் காண தந்திரமாக செயல்படுவது உத்தமம். சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் தைரியமாக எந்த ஒரு செயலையும் செய்வீர்கள். குடும்ப ஒற்றுமையில் இருந்து வந்த விரிசல் மறையும். தொழில் ரீதியான முன்னேற்றம் காண கொடுத்த வாக்குறுதிகளை சரியாக நிறைவேற்றுங்கள். உயர் அதிகாரிகளிடம் சில மனக்கசப்புகள் உண்டாக்கலாம். ஆரோக்கியம் நலம் பெறும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மாற்றங்கள் நிறைந்த நன்மை தரக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. நீங்கள் உங்களுடைய சுயநலத்தை மட்டும் பார்க்காமல் அடுத்தவர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்வதும் நன்மை தரும். வருமானம் சீராக இருக்கும். வேலை வாய்ப்புகளில் அனுகூல பலன் கிட்டும். ஆரோக்கியம் மேம்படும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பல எதிர்ப்புகள் அடங்கும் நல்ல நாளாக இருக்க போகிறது. குடும்ப பிரச்சனைகளை சரியான முறையில் நிதானமாக கையாண்டு முடிப்பீர்கள். பகைவர்களின் சூழ்ச்சிகளை எளிதாக வென்று காட்டுவீர்கள். உங்களின் திறமைக்கு உரிய பலன்கள் கிடைக்க பொறுமையுடன் இருப்பது நல்லது. ஆரோக்கியம் வழுவாகும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுமை ரொம்பவும் தேவைப்படக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. எவ்வளவு தடைகள் வந்தாலும் அதை துணிச்சலுடன் எதிர்கொள்ளுங்கள். உடன் இருப்பவர்கள் மூலம் சில சங்கடங்கள் வரக்கூடும். உத்தியோக ரீதியான உயர்வுகளில் சாதக பலன் கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடமையிலிருந்து பின் வாங்காதீர்கள். எதையும் தட்டி கழிக்காமல் பொறுப்புடன் நடந்து கொள்வது நன்மை தரும். தொழிலில் ஏற்றம் காண்பதற்கு சக ஊழியர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கப் போகிறது.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் தரும் அமைப்பாக இருக்கிறது. நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றி அடையக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த குழப்பங்கள் தீரும். தொழில் சார்ந்த விஷயத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு நிதானம் தேவை. உடல் நலத்தை கவனியுங்கள்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எடுக்கக்கூடிய முடிவுகளில் தீர்க்கமாக இருப்பது நல்லது. குழப்பமான மனநிலையில் இருந்து மீள இருக்கிறீர்கள். சுய தொழிலில் லாபம் காண்பதற்கு அயராத உழைப்பு தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக பணியாளர்களை அனுசரித்து செல்லுங்கள். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மகிழ்ச்சியான நாளாக கொண்டாட இருக்கிறீர்கள். நீங்கள் செய்ய நினைப்பதை உடனே செய்து விடுங்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதை தாமதப்படுத்தாதீர்கள். வாடிக்கையாளர்களின் மனம் கவரும் முயற்சி செய்வீர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணி சுமை கூடும். ஆரோக்கியம் மேம்படும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்காலம் பற்றிய திட்டமிடல் அதிகரிக்கும். தொலைதூர இடங்களில் இருந்து சுப செய்திகளை கேட்கக்கூடும். குடும்ப சண்டைகளை பேசி தீர்த்துக் கொள்வீர்கள். கணவன் மனைவி இடையே இருக்கும் ஒற்றுமையில் விரிசல் விழலாம் கவனம் வேண்டும். வெளியிட பயணங்களின் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சியை நிரம்பிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே ஒற்றுமை பலப்படும். தொழில் சார்ந்த முயற்சிகளில் நீங்கள் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் நடக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற ஊதியத்தோடு சலுகைகளும் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம்.