மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் ஆலோசனைகளை மற்றவர்கள் மதிக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. சுய தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத நபர்களின் வருகை மகிழ்ச்சி அடைய செய்யும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வேலைகள் குறித்த விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். கணவன் மனைவி இடையே பொறுப்புகள் அதிகரிக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தீட்டிய திட்டங்கள் தீட்டி எப்படி நிறைவேற வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் இருப்பவர்களுக்கு ஆன்மீக ரீதியான விஷயங்களில் கவனம் அதிகம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் என்று சில முக்கிய நபர்கள் சந்திக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். கணவன் மனைவி இடையே இருந்து வந்த நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திருப்தியான நாளாக அமைந்து இருக்கிறது. உங்களுடைய கனவுகள் நனவாகும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்புகளில் கவனம் தேவை. கவன சிதறல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் அக்கறையுடன் செயல்படுவார்கள். குடும்பத்தில் அமைதி இருக்கும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் எண்ணங்கள் ஈடேறும் வகையில் இடையூறு ஏற்படலாம். எனினும் உங்களுடைய விடாப்பிடியான முயற்சி விஸ்வரூப வெற்றியை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கிடைக்க வேண்டிய கமிஷன் தொகை கிடைக்கும். வரவேண்டிய பழைய பாக்கிகளும் வந்தடையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான பலன்களைக் கொடுக்கக் கூடிய அற்புத நாளாக அமைய இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உங்கள் உழைப்பிற்கு உரிய பயனை பெறப் போகிறீர்கள். எதிர்பார்த்த பணவரவு சிறப்பாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டநாள் இழுபறியில் இருந்த சில வேலைகள் முடிவுக்கு வரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்சாகம் தரும் அற்புத நாளாக அமைய இருக்கிறது. மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளை நீக்கி மனம் விட்டு பேசிக் கொள்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தொழிலில் எதிர்பார்க்கும் ஒப்பந்தங்கள் கைக்கு கிடைக்கும். பங்குதாரர்களின் உதவி ஏற்றம் தரும் வகையில் அமையும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தன்னம்பிக்கையை உங்களை உயர்த்தக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. கிடைக்கின்ற வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்திக் கொள்வது நல்லது. சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சில நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்ளும் பாக்கியம் அமையும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை விட சிறப்பான நாளாக அமைய இருக்கிறது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி காணும் யோகமுண்டு. கணவன் மனைவியிடையே இருந்து வந்த ஒற்றுமை குறைவு நீடிக்கும் என்பதால் கவனம் தேவை. சக போட்டியாளர்கள் எதிர்த்து போராடி வெற்றி அடைய கூடிய வலிமை உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். ஆரோக்கியம் சீராகும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் எதிலும் ஜெயம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வேண்டிய வேண்டுதல்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சில விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. உங்களை சுற்றி இருப்பவர்களைப் பற்றிய புரிந்துணர்வு ஏற்படும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பணி சுமை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை நிதானம் தேவை. உடல் சோர்வு, மனச்சோர்வு ஏற்படலாம். கணவன் மனைவி ஒற்றுமையில் குறைவிருக்காது. குடும்ப விஷயங்களை மூன்றாம் நபர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கிய ரீதியான விஷயத்தில் படிப்படியான முன்னேற்றம் இருக்கும். குலதெய்வ வழிபாடு செய்வது உத்தமம்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு அதிகம் பொறுமையுடன் இருக்க வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. தேவையற்ற வார்த்தைகளை விட்டு விட்டு பின்னர் யோசிப்பது நல்லது அல்ல. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பெருந்தன்மையுடன் செயல்படக்கூடிய பாக்கியம் உண்டாகும். உங்களை விட குறைந்தவர்களை ஊக்கப்படுத்தி வேலை வாங்குவது நல்லது.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களை சுற்றி ஒரு நட்பு வட்டம் விரியும். உங்கள் கேள்விகளை மற்றவர்கள் ஆமோதிப்பார்கள். குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுயதொழிலில் எதிர்பார்ப்பதை விட லாபம் அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற நபர்களின் அறிமுகம் தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்பட அக்கறை தேவை.