மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் தேவையற்ற வார்த்தைகளை உதிர்க்க வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதையும் எதிர்கொள்ளும் வல்லமை கொள்வீர்கள். பகைமை தவிர்த்து நட்பு பேணுவது நல்லது.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எளிதில் எதையும் நீங்கள் அடைந்து விட முடியாது, எதையும் போராளி தான் பெற வேண்டி இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் செய்பவர்கள் எதிர்பாராத திடீர் யோகத்தை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் உற்சாகமாக அனுப்புவீர்கள். சுய தொழிலில் எதிர்பார்க்காத லாபம் உங்களுக்கு கிடைக்கப் போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பயணங்கள் அனுகூல பலன் கொடுக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் செழிப்புடன் இருக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. இதுவரை உங்களை சுற்றி இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக விலக துவங்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு செய்த முயற்சிக்கான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை. வீண் பகை வளர்க்க வேண்டாம்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய பலன்கள் கிடைக்க கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. உங்கள் மனதில் இருக்கும் உளைச்சல் நீங்கி தெளிவு பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரிகள் உள்ளவர்களுக்கு எதிர்பாராத புதிய விஷயங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் நிதானத்தை இழக்கப்படும் கவனம் வேண்டும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடமையில் கூடுதல் அக்கறையுடன் இருப்பது நல்லது. குடும்பத்திற்கு உங்களுடைய தேவை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் வாடிக்கையாளர்களிடத்தில் நன்மதிப்பு பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களிடமிருந்து பாராட்டுகள் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய ஆரோக்கிய ரீதியான பாதிப்புகளை கவனிப்பது நல்லது. சிறு சிறு அலட்சியமும் பேராபத்தாக முடிய கூடும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய யுத்திகளை கையாளும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடமையில் கவன சிதறல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு, எச்சரிக்கை தேவை.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரும் அமைப்பாக இருக்கிறது. நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றியாக கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் வெளியிட பயணங்களின் பொழுது கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வாகன ரீதியான வீண் விரயங்கள் உண்டாகும். ஆரோக்கியம் மேம்படும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தடைகளை தாண்டிய முன்னேற்றம் உண்டாகப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சுயமாக முடிவு எடுப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். கணவன் மனைவியிடையே ஒற்றுமை தேவை. சுபகாரிய தடைகள் விலகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிலும் ஏற்றம் காணக்கூடிய அமைப்பாக இருக்கிறது. உங்களுடைய திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்கக்கூடிய நாளாக இருக்கப் போகிறது. உங்களை சுற்றி இருப்பவர்களே உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். கணவன் மனைவியுடைய விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் இன்று எதையும் ஒரு மணிக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்ப விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. அவசரப்படாமல் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முயற்சி செய்யுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தொலைநோக்கு பார்வை அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் இறை நம்பிக்கை உடன் எந்த ஒரு முயற்சியையும் செய்வீர்கள். ஆரோக்கியத்தில் சிறு சிறு குறைகள் வந்து மறையும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தொலைதூர இடங்களில் இருந்து சுப செய்திகளை பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் இடமாற்றம் குறித்த விஷயத்தில் சாதக பலன் பெறுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவதில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.