மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எந்த ஒரு விஷயத்திலும் அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் கவனமாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் யாரையும் பகைத்துக் கொள்ளாமல் இருங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வாகன ரீதியான வீண் விரயங்கள் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை. பெண்களுக்கு பொறுமை தேவை.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல பலன்களைக் காண இருக்கிறீர்கள். குடும்பத்தில் அமைதிக்கு குறைவிருக்காது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் புதிய முதலீடுகள் செய்வீர்கள். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி தானாகவே வரும். உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் பணி புரிய வாய்ப்பு உண்டு என்பதால் முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பெண்களுக்கு அதிர்ஷ்டம் உண்டு.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். மற்றவர்களிடம் பேசும்பொழுது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தீட்டிய திட்டங்கள் நிறைவேற கூடிய நல்ல நாளாக இருக்கிறது.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. சகோதர, சகோதரிகளுக்குள் பாசம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத நபர்களுடைய சந்திப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளுக்கு பல தடைகள் ஏற்படலாம். பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய துணிச்சல் உங்களுக்கு பக்கபலமாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சோர்வு காணப்படும் என்பதால் தேவையான ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு ஆடை, அணிகலன்கள் சேர வாய்ப்பு உண்டு.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் நடை பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பங்குதாரர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உங்களுடைய திறமையை நிரூபிக்க கூடிய நல்ல நாளாக இருக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு அனுகூலமான நல்ல பலன்கள் கிடைக்க கூடிய நாளாக இருக்கிறது. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெளியிடங்களில் செல்வாக்கு அதிகரித்து காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நீங்கள் வைக்கும் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வார்கள். பெண்களுக்கு திடீர் யோகம் உண்டு.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய வருமானம் அதிகரிக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. புதிய முதலீடுகள் செய்வதற்கு வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதுமுக அறிமுகம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் அலைச்சல் ஏற்படலாம். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவடைய கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அரசு வழி காரியங்களில் ஆதாயம் உண்டு. கணவன் மனைவியிடையே இருந்து வந்த விரிசல் நீங்கும். பெண்களுக்கு நிதானம் தேவை.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை நடத்திக் காட்டும் நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். வெளியிட பயணங்களின் பொழுது உடைமை மீது கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடீர் லாபம் ஏற்படும். உங்களுடைய பழைய பாக்கிகள் வசூல் ஆகும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத செலவு வரும் என்பதால் ஆடம்பரத்தை தவிர்ப்பது நல்லது.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பொறுமை அதிகரிக்க வேண்டிய நாளாக இருக்கும். தேவையற்ற வார்த்தைகளை உபயோகிப்பதன் மூலம் சில இழப்புகளை சந்திக்க நேரலாம். கணவன் மனைவிக்குள் புரிதல் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத இடத்திலிருந்து பணவரவு இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு சுமுகமான சூழ்நிலை காணப்படும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய வேலையில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. இந்த மனிதர்களுடைய பிரச்சனைகளில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பெரிய தொகையை ஈடுபடுத்தி அதிக லாபம் காணும் வாய்ப்பு அமையும். உத்யோகஸ்தர்களுக்கு சமயோசிதமாக செயல்படுவதன் மூலம் பாராட்டுகள் உண்டு. பெண்களுக்கு துணிச்சல் அதிகரிக்கும்.