மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக அமைய போகின்றது. குடும்பத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நிகழும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு தடைபடலாம் எனவே கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத திடீர் அலைச்சல் ஏற்படலாம் எனினும் ஈடுபாடு அதிகம் இருக்கும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான நல்ல பலன்கள் கிடைக்க கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மேலும் முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும். காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்னும் பழமொழிக்கு ஏற்ப செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் பெருகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராத திடீர் நன்மைகளை பெறப் போகிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கடமையில் கூடுதல் அக்கறை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு இட மாற்றம் குறித்த விஷயங்களில் சாதக பலன் கிடைக்கும். கணவன் மனைவி இடையே தேவையற்ற பேச்சு வார்த்தைகளை தவிர்த்துக் கொள்வது நல்லது.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய நேர்மறையான எண்ணங்களிலிருந்து தடுமாறாமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற மனக் குழப்பங்கள் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு நினைத்ததை சாதித்து காட்ட கூடிய யோகம் உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் கவனமாக இருப்பது நல்லது. உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களுக்கு ஆபத்தாக செயல்படுவார்கள். கணவன் மனைவியிடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் வந்து நீங்கும். விவசாயிகளுக்கு வருமான உயர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. வியாபாரிகள் நீங்கள் புதிய விஷயங்களில் ஈடுபடுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் பேசுவீர்கள். உங்களுடைய கவித்துவமான பேச்சில் மற்றவர்கள் மயங்கக் கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு வெளியில் அலைச்சல் ஏற்படலாம். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சுறுசுறுப்பிற்கு குறைவிருக்காது. எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் கூடுமானவரை கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு அதிக வேலைப்பளு காரணமாக டென்ஷன் உண்டாகலாம். மனோதிடம் தேவை.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் விரும்பிய விஷயங்களை அடைவீர்கள். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதக பலன் உண்டு. கணவன் மனைவி இடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து ஒற்றுமை காப்பது நல்லது. உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் இணக்கம் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது வேறு ஒன்றாக நடக்கும். நடப்பவை யாவும் நல்லவையே என்று எடுத்துக் கொள்ளுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இறைவழிபாடு மீது அதிக ஆர்வம் காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு சகா போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் கூடுதல் உழைப்பு தேவை. ஆரோக்கியம் சீராகும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனம் மகிழும் படியான நல்ல விஷயங்கள் நடைபெறும். தடைப்பட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் வந்து சேரும் இதனால் பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய நியாயமான கோரிக்கைகளை தைரியமாக முன் வைப்பது நல்லது. எதிலும் பின் வாங்காமல் இருப்பது உசிதமானது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பண ரீதியான தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் சமயோசிதமாக செயல்படுவது நல்லது.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுத்து வைக்கும் காரியம் வெற்றி அடைய கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொட்டதெல்லாம் துலங்கும் அற்புதம் நிகழும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மந்த நிலை காணப்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பொருட் சேர்க்கை ஏற்படும்.