மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஒரு புதிய நாளாக அமைய இருக்கிறது. எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பல தடைகளைத் தாண்டிய முன்னேற்றம் உண்டாகும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. உங்களுடன் இருந்து கொண்டே உங்களுக்கு எதிராக செயல்படக் கூடியவர்கள் இருக்கக்கூடும். சுய தொழிலில் எதிர்பாராத தனவரவு திருப்திகரமாக அமையும். உத்யோகத்தில் உள்ளவர்கள் நேர்மையுடன் இருப்பது நல்லது. ஆரோக்கியம் சீராகும். மிதுனம்: மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் தரும் நாளாக அமைய இருக்கிறது. மனக் கவலைகள் நீங்கி புது உற்சாகம் பிறக்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களுடன் இணக்கம் உண்டாகும். புதிய யுக்திகளை பயன்படுத்தி லாபம் காண்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் தாங்கள் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கிறது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நீங்கள் எடுக்கின்ற முயற்சியில் மற்றவர்களுடைய ஒத்துழைப்பு குறைவாக இருக்கும். உத்யோகத்தில் உள்ளவர்கள் தங்கள் பணிகளில் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயலாற்றுவது நல்லது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் மீண்டும் முன்னிறுத்தி நடத்திக் கொண்டு செல்வீர்கள். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையற்ற விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் நடப்பது நடக்கட்டும் என்று இருப்பது நல்லது.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்துக் கொண்டிருந்த சில விஷயங்களுக்கு எதிர்மறையாக நடக்க வாய்ப்புகள் உண்டு என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது. கணவன்-மனைவியிடையே பரஸ்பர அன்பு மேலோங்கி காணப்படும். சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்த்ததை விட லாபம் பெருக கூடும். உத்யோகத்தில் உள்ளவர்கள் மேல் அதிகாரிகளுடன் தேவையற்ற சண்டை சச்சரவுகளைத் தவிர்ப்பது நல்லது.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும் எனவே கவனமுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நீங்கள் எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நேர்மறையான சிந்தனைகள் காணப்படும். வெளியிடங்களில் கவனத்துடன் இருப்பது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கும் திடீர் முடிவுகளுக்கு மற்றவர்களுடைய ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எதிர்காலம் பற்றிய சிந்தனையில் இருப்பீர்கள். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியிட பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்க இருக்கிறது. ஆரோக்கியம் மேம்படும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஆரோக்கிய ரீதியான சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையலாம் எனவே சோர்வுடன் காணப்படுவார்கள். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்தநிலை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்கள் பணிகளை சிறப்பாக நிறைவேற்றிக் கொள்வதில் கவனம் தேவை. மறைமுக எதிரிகளின் தொல்லை வலுவாகும் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனம் நிறையும் படியான சில சம்பவங்கள் நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யாரையும் எதிர்பார்க்காமல் தங்களுடைய கடமைகளை செவ்வனே நிறைவேற்றிக் கொள்வது உத்தமம். கணவன் மனைவி பேச்சில் ஒற்றுமை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அமைதி இருக்கும். ஆரோக்கிய ரீதியான முன்னேற்றம் படிப்படியாக உயரும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வெளியிட பயணங்களில் கவனமுடனிருப்பது நல்லது. சாதகமற்ற அமைப்பு என்பதால் முக்கிய முடிவுகளை சற்று தள்ளி வைப்பது உத்தமம். தொழிலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை கவனம் தேவை. கணவன் மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். உத்யோகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்து காட்ட கூடிய அற்புத வாய்ப்புகள் கிடைக்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எதிர்பார்க்கும் லாபம் உயருவதை காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்களுடைய பணியில் கூடுதல் அக்கறை உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் அனுகூல பலன் உண்டாகும். சகோதர சகோதரிகளுக்கு இடையே ஒற்றுமை ஏற்படும்.