மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்கள் இந்த நாளில் நீங்கள் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டங்களையும் சந்திக்க இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் மற்றவர்களை நம்பி ஒப்படைக்கும் வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற நபர்களுடைய அறிமுகத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் இந்த நாளில் புதுமை படைக்கும் அற்புத நாளாக அமைய இருக்கிறது. உங்கள் நேர்மறையான சிந்தனைகள் மற்றவர்களை எளிதில் கவரும் வண்ணம் நடந்து கொள்ளப் போகிறீர்கள். சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெறும். கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்வது நல்லது.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்கள் இந்த நாளில் நீங்கள் இனிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளக் கூடிய வாய்ப்புகள் அமையும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தேவையற்ற வீண் அலைச்சல் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குறித்த நேரத்திற்குள் வேலையை முடித்துக் காட்டுவீர்கள்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்கள் இந்த நாளில் நீங்கள் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தேவைப்படும் பொழுது உங்களுக்கு பண கஷ்டம் ஏற்படாமல் இருக்க சீக்கிரம் மேற்கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாகன ரீதியான வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் பண வரவு உண்டாகும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் இந்த நாளில் நீங்கள் செய்யக்கூடிய அற்புதமான விஷயங்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் புதிய முயற்சிகளுக்கு ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் குடும்பத்துடன் செலவிடக் கூடிய நல்ல நாளாக இருக்கும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்கள் இந்த நாளில் நீங்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு விஷயங்களும் ஜாக்கிரதையாக செய்ய வேண்டியது அவசியமாக இருக்கும். தேவையற்ற நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கவன சிதறல் ஏற்படலாம்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்கள் இந்த நாளில் நீங்கள் எடுத்து வைக்கும் அடியில் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதுமையை புகுத்த கூடிய இனிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்க பெரும். கணவன் மனைவி ஒற்றுமையில் குறைவில்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் இந்த நாளில் நீங்கள் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்து முடிப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சவால் நிறைந்த நாளாக இருக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு மனத்தெளிவு உண்டாகும். குடும்பத்துடன் நேரத்தை செலவிட கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்கள் இந்த நாளில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி காண கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்த தொழில் மற்றும் வியாபாரம் சூடுபிடிக்க துவங்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் உண்டாகும். தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்கள் இந்த நாளில் மற்றவர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவதற்கு போராடக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படும் என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு உடல் சோர்ந்து காணப்படும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்கள் இந்த நாளில் உங்களுடைய தாழ்வு மனப்பான்மையை நீக்கி புதிய நாளாக பார்க்கக்கூடிய அதிர்ஷ்டம் உண்டு. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகம் சகிப்புத்தன்மை தேவைப்படக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. தேவையில்லாமல் வார்த்தைகளை விட்டு விட்டு பின்னர் யோசிக்க வேண்டாம்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்கள் இந்த நாளில் உங்களுடைய அலட்சியம் காரணமாக சில இழப்புகளை சந்திக்க நேரலாம் என்பதால் கூடுமானவரை விழிப்புணர்வுடன் செயலாற்றுவது நல்லது. கணவன் மனைவி இடையே நடக்கும் பிரச்சனைகளை பற்றிய விஷயங்களை வெளியில் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது உத்தமம். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் காணலாம்.