மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சமயோசிதமாக செயல்படுவதன் மூலம் அனுகூலம் உண்டு. முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்கள் மன அமைதியைக் கொடுக்கும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முழு ஒத்துழைப்பும் கொடுத்து முயற்சி செய்வது வெற்றியை கொடுக்கும். பொருளாதார ஏற்றம் காண்பதால் தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வீட்டு தேவைகள் எளிதாக பூர்த்தியாகும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உத்யோகஸ்தர்களுக்கு சக பணியாளர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தன்னம்பிக்கையை அதிகரிக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் திருப்பங்கள் திக்கு முக்காடச் செய்யும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் தீரும். சுயதொழிலில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம் ஏற்படலாம்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வேண்டிய இடத்திலிருந்து பணவரவு சீராக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கண்களால் பார்ப்பதும் பொய், காதல் கேட்பதும் பொய் என்று இருப்பது நல்லது.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி கொடுக்கும் நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கடன் தொல்லைகள் நீங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் இனிய நாளாக இந்நாள் இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பாதிப்புகள் படிப்படியாக குறையத் தொடங்கும்.
கன்னி:
கன்னி பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மிகுந்த மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டிய நல்ல நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
துலாம்:
துலாம் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் என்பதால் வீட்டு தேவைகள் எளிதாக பூர்த்தி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடீர் எதிர்பாராத நன்மைகள் நடக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் பெருகும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வகையில் நஷ்டம் ஏற்பட வைப்புகள் உண்டு. வெளியிட பயணங்களின் பொழுது உடைமை மீது கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமையும், அமைதியும், தேவை.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனம் தெளிவாக சிந்திக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் மேலோங்கி இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணம் பல வழிகளில் வந்து சேரும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். ஆரோக்கியம் சீராக உணவில் கவனம் தேவை.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தொழிலை விரிவுபடுத்தும் நிலை உண்டு. புதிய நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உறுதியாக முடிவுகளை எடுப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் பதட்டம் தேவையில்லை, பொறுமையுடன் இருப்பது நல்லது.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் உங்களுடைய பங்களிப்பு அதிகம் இருக்க கூடிய வகையில் இந்நாள் இருக்க போகிறது. கணவன் மனைவி இடையே கருத்து மோதல் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி அடையக் கூடிய அமைப்பாக இருக்கிறது.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். எவ்வளவு தடைகள் வந்தாலும் அதை எதிர்த்து சமாளிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அதிஷ்டம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதையும் சாதிக்கக் கூடிய வல்லமை அதிகரிக்கும். வெளியிடத்தில் வாக்கு வாதங்கள் தவிருங்கள்.