மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் வெற்றி பெற அடையக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. நீங்கள் நினைத்ததை நினைத்தபடி முடித்து காட்டுவீர்கள். குடும்ப ஒற்றுமையில் குறைவிருக்காது. சுய தொழிலில் உள்ளவர்கள் பயணங்களால் லாபம் காணக்கூடிய வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு டென்ஷன் காணப்படும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் போட்டிகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உங்களுடன் இருப்பவர்களே உங்களுக்கு எதிராக செயல்படக்கூடும் கவனம் வேண்டும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அமைதி தேவை. அனாவசிய வாக்குவாதங்களை தவிருங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நற்செய்திகள் கிடைக்கும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் துணிச்சலுடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய அமைப்பாகவும் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்கள் சில சிக்கல்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படும் இதனால் சோர்வுடன் இருப்பீர்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் வாக்குவாதங்களை தவிர்த்து பேச்சில் இனிமையுடன் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தேவையான ஓய்வு கிடைக்காது. மற்றவர்களுடைய வேலையையும் சேர்த்து செய்ய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் சுமூகமான சூழ்நிலை இருக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அலைச்சல் ஏற்படக்கூடிய வாய்ப்பு உண்டு. எதையும் பதறாமல் செய்யுங்கள். கணவன் மனைவிக்கு இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சுய தொழிலில் நிறைவு காண புதிய விஷயங்களை புகுத்துவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பகையும் நட்புடன் பழகும் யோகம் உண்டு.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் ஜெயம் காணக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. தொலைதூர இடங்களில் இருந்து சுப செய்திகளை பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கவனம் தேவை மறதி ஏற்பட வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்ப்புகள் வலுவாகும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுகவீனம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு கவனம் வேண்டும். குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமையில் விரிசல் விழ வாய்ப்பு உண்டு கவனம் வேண்டும். சுய தொழிலில் உள்ளவர்கள் அவசரப்படாமல் முக்கிய முடிவுகளை காலதாமதம் செய்யுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் இருக்கும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்சாகம் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்ப செலவுகளுக்கு திட்டமிட்டு செயல்படுவது நல்லது. சுய தொழிலில் நேர்மையுடன் இருப்பது முன்னேற்றத்தை கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். ஆரோக்கிய அக்கறை தேவை.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஊக்கம் நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. உற்றார், உறவினர்களின் ஆதரவு அதிகரிக்க வாய்ப்பு உண்டு. நண்பர்களின் மூலம் கிடைக்க வேண்டிய உதவிகள் கிடைக்கும். சுய தொழிலில் எதிர்பாராத திருப்பங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை குறையும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் இருக்கும் சலனம் தீரக்கூடிய வாய்ப்பு உண்டு. தேவையற்ற சிந்தனைகளை வளர்க்க வேண்டாம். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நடக்க வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் உள்ளவர்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கிடைக்க வேண்டிய விஷயம் காலதாமதம் ஆகும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுப தினமாக அமைவதற்கு வாய்ப்புகள் உண்டு. குடும்பத்துடன் மனம் விட்டு பேசி பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளுங்கள். சுய தொழிலில் மறைமுக எதிரிகள் தொல்லை குறையும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இறை சிந்தனை அதிகரிக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மன பயம் நீங்க கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. இதுவரை இருந்து வந்த எதிர்மறை எண்ணங்கள் மறைய கூடும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளை உண்டாக்காதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பு பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளால் டென்ஷன் ஏற்படும்.