மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை அடைவதில் இடையூறுகள் ஏற்படலாம். எப்போதும் நேர்மையாக நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவு குறையும். தேவையற்ற சிந்தனைகள் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. ஆரோக்கியத்தை கவனிப்பது நல்லது.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரும் நல்ல பலன்கள் உண்டாகும். வெளியிட பயணங்களின் பொழுது உங்கள் பேச்சில் இனிமையை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவு ஏற்படாமல் இருக்க அனுசரித்துப் போவது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பண வரவு உண்டாகும் என்றாலும் ஆடம்பரத்தை தவிர்ப்பது நல்லது.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பனிப்போர் நீங்கும். தொலை தூர இடங்களில் இருந்து நல்ல செய்திகளை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தொழில் மந்த நிலை மாறி சூடு பிடிக்கத் துவங்கும். ஆரோக்கியம் மேம்படும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரும் அற்புதமான வாய்ப்புகள் இருப்பதால் நீங்கள் திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி நடக்கும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் மீண்டும் ஈடுபடும் வாய்ப்பு உண்டு. சுயதொழில் புரிபவர்களுக்கு அதிகம் பொறுமை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களை மற்றவர்கள் எளிதாக மூளை சலவை செய்து விடாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தொலைதூரப் பயணங்கள் செல்லும் வாய்ப்புகள் ஒரு சிலருக்கு உண்டாகும். பூர்வீக சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புதிய நட்பு வட்டம் விரிவடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அன்புடன் தரும் அமைப்பாக இருப்பதால் நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு சாதகப் பலன் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு நிதானம் தேவை.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கடமையில் கூடுதல் அக்கறை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் தன லாபம் பெற கூடுதல் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் வரக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால் பொறுமை காப்பது நல்லது. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். உங்களை சுற்றியுள்ள மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கும். போட்டியாளர்களை சாமர்த்தியமாக வெற்றி கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு நினைத்த சலுகைகள் கிடைக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் குடும்பத்தில் இருக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை திறம்பட சமாளிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் வரும் யோகமுண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுயசிந்தனை செய்வதன் மூலம் நற்பலன்கள் காணும் வாய்ப்புகள் உண்டு. மூன்றாம் மனிதர்களிடமிருந்து எச்சரிக்கை தேவை.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பாக இருப்பதால் நீங்கள் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பனிப்போர் பழைய ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து செல்வது நல்லது. தேவையற்ற சந்தேகங்களை தவிர்ப்பது உத்தமம். சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்களில் கவனம் தேவை.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனதில் இருக்கும் கவலைகளை நீக்கி உற்சாகத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கும் முன்னேற்றம் சீராக இருக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்களை சாமர்த்தியமாக எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்துக் காட்டுவீர்கள். தேவையற்ற வார்த்தைகளை வெளியில் விடாமல் இருப்பது நல்லது. உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்கிற ஏக்கம் தீரும். உங்களைப் பற்றிய விமர்சனங்களை தகர்த்தெரிந்து வீரநடை போடும் வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி வரும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைக்கும் விஷயம் எதிர் மாறாக நடக்க வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தங்கள் பணியில் கூடுதல் அக்கறை தேவை. புதிய பணியாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது. ஆரோக்கிய ரீதியாக ஏற்பட்டுக் கொண்டிருந்த சிறு சிறு பாதிப்புகள் நீங்கும்.