மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல விஷயங்கள் நடைபெறும் வாய்ப்புகள் அதிகம். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் தனலாபம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தொலைதூர பயணங்களின் பொழுது கவனம் தேவை. ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் குறையும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்லதொரு இனிய நினைவுகளை கொடுக்கக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு கவலை நீங்கி புது உற்சாகம் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் அனுகூல பலன் தரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வருமானம் பெருக்க வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்கும் விஷயங்களுக்கு தலைகள் ஏற்படலாம் எனவே கவனம் தேவை. சாதகமற்ற அமைப்பு என்பதால் வீண் விரயங்கள் ஏற்படும். தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் காணலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளுடன் மனக்கசப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆரோக்கிய ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமைய இருக்கிறது. தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்த உங்களுக்கு புது உற்சாகம் பிறக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். பெற்றோர்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெளியிடங்களில் புதிய நட்புகள் வளரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலையில் கூடுதல் அக்கறை அதிகரிக்கும். கணவன் மனைவி பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை உண்டாகும். ஆரோக்கியம் மேம்படும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கடமையை கூடுதல் கவனம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி பிரச்சனைகளுக்கு விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பெரிய தொகையை ஈடுபடுத்தி அதிக லாபம் காணும் யோகமுண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மனச்சோர்வுடன் காணப்படுவீர்கள். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் பேச்சாற்றலால் மற்றவர்களை எளிதில் கவரும் அற்புத வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். உத்யோகத்தில் உள்ளவர்கள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவ மௌனம் காப்பது உத்தமம். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் கவனத்துடன் இருப்பது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெளியிட பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பணவரவு சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். உத்யோகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய பணியில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது. கவன சிதறல் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் விழிப்புணர்வுடன் செயலாற்றுவது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவி இடையே நடக்கும் பிரச்சனைகளை வெளியில் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய பணியில் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்படுவீர்கள். நீண்ட நாள் நண்பர் ஒருவரை சந்திப்பீர்கள்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனம் மகிழும் படியான சில நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே நடக்கும் பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் பெருகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியீட பயணங்களின் பொழுது கூடுதல் கவனம் தேவை. வாகன ரீதியான வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும். வெளியூரில் வேலை தேடி அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு கொடுத்த வாக்கினை காப்பாற்றும் எண்ணம் மேலோங்கி காணப்படும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கடமையில் அக்கறை தேவை.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களுடைய பணியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற இழப்புகளை தவிர்க்க விழிப்புணர்வு தேவை. உத்யோகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவி இடையே இருந்து வந்த பிரச்சனைகள் தீரும், பரஸ்பர ஒற்றுமை அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராகும்.