மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படும் என்பதால் கூடுமானவரை கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்தினர் ஆதரவு கிடைப்பதில்லை இடையூறுகள் ஏற்படலாம். கணவன் மனைவியிடையே வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முன்னேற்றத்தை நோக்கி நீங்கள் எடுத்து வைக்கும் அடியில் வெற்றிகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் தோன்றி மறையலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு களைப்பு மற்றும் டென்ஷன் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு பிரச்சினைகள் உருவாகும் என்பதால் நிதானம் தேவை.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய சிந்தனைகள் நேர்மறையாக இருப்பது மிகவும் நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் புதிய விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பொருளாதார பிரச்சினைகளை திறம்பட சமாளிப்பீர்கள். தேவையான இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கும். கடின உழைப்பு தேவை.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய மனநிலையை சீரற்றதாக இருக்கும் என்பதால் கூடுமானவரை நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் குடும்பத் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மங்கள செய்திகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் ஊடல்கள் நீங்கி ஒற்றுமை பலப்படும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிரமம் தரும் சில வேலைகளை கூட சுலபமாக செய்து முடித்துக் காட்டுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய பிரியமானவர்களுடைய ஆதரவு பரிபூரணமாக கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மறைமுக எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி கொள்வீர்கள். மனசஞ்சலம் தீர மகேஸ்வரனை வழிபடுங்கள்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய நேரம் சிறப்பாக இருப்பதால் நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய சாதுரியமான நடவடிக்கைகளால் முன்னேற்ற பாதையில் செல்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய பணிகளில் கூடுதல் அக்கறையுடன் இருப்பீர்கள். ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மற்றவர்களுடைய ஆதரவு கிடைப்பதில் இடையூறு ஏற்படும் என்பதால் சில விஷயங்களை எதிர்கொள்ள சிரமப்படுவீர்கள். உங்களுடைய விடாமுயற்சிக்கு எப்பொழுதும் நண்பர்களின் ஆதரவு உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்படாமல் சுமுகமாக செல்லும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய லட்சியங்கள் நிறைவேறும். ஆரோக்கியம் மேம்படும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சில நல்ல செய்திகளை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு தடையாக இருந்தவர்கள்கூட நட்புறவு கொள்வார்கள். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்க ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் செய்யும் முதலீடுகளுக்கு உரிய லாபம் காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நன்மைகள் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடின உழைப்பின் பலன் கிடைக்கும் அற்புத நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையில் இருக்கும் வேற்று கருத்துக்களை நீக்கி ஒருமித்த கருத்து உருவாக போராடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனதில் அமைதி இருக்கும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் இருக்கும் சஞ்சலங்கள் தீர்ந்து தெளிவான சிந்தனை உருவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய எதிரிகளிடம் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைகளை நேரத்திற்கு முடிக்கும் ஆற்றல் பிறக்கும். வரவைக் காட்டிலும் செலவு அதிகம் ஏற்படும் என்பதால் செலவு செய்வதில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பலவீனமான மனநிலை இருக்கும் என்பதால் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சில நுணுக்கங்களை கற்றுக் கொண்டு வெற்றி அடையும் யோகம் உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றத்தாழ்வுகளை கலைந்து இனிமையான பேச்சாற்றல் அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய வருமானம் அதிகரிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சீராகும்