மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணவரவு பெறுவதில் இருந்து வந்த தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படும் இதனால் சோர்வு தெரியும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் இல்லம் தேடி வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையற்ற இடங்களில் மட்டும் உங்கள் கருத்துக்களை வைப்பது நல்லது. கணவன் மனைவி இடையே எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும் இதனால் ஏமாற்றங்களும் ஏற்படும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் உங்களை புரிந்து கொள்ள மற்றவர்கள் முயற்சி செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். ஆனால் நீங்கள் தான் மற்றவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும். உத்யோகத்தில் உள்ளவர்கள் தங்கள் விமர்சனத்தை கருத்தில் கொள்ளாது செயல்படுவது நல்லது.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் கடன் தொல்லைகள் நீங்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. இதுவரை உங்களுக்கு இருந்து வந்த பொருளாதார ரீதியான பிரச்சனைகள் மாறும். சுயதொழில் எதிர்பார்க்கும் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு போட்டிகள் குறையும். மேல் அதிகாரிகளுடன் இணக்கம் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் கணவன்-மனைவிக்குள் அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்கள் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் மற்றவர்களை பரிந்துரை செய்வதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் வெளியிட போக்குவரத்துகள் கவனத்துடன் இருப்பது வேண்டும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாளில் கனிவுடன் பேசக்கூடிய நல்ல நாளாக அமைய உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தங்கள் மறைமுக எதிர்ப்புகளை முறியடிக்கக் கூடிய தைரியம் பிறக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் கவனம் தேவை.
துலாம்:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திக்க நேரலாம் என்பதால் கூடுமானவரை மௌனம் காப்பது நல்லது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வாகன ரீதியான வீண் விரயங்கள் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சனைகளை மேலும் பெரிதாகாமல் ஆற போடுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் நல்ல விஷயங்கள் நடைபெறும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் பொறுமை தேவைப்படக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு தங்கள் மறைமுக எதிரிகளை எதிர்க்கும் தைரியம் பிறக்கும். மேலும் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு பெருகும். வழக்குகளில் வெற்றி காணும் யோகம் உண்டு.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக அமைய இருக்கிறது. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தங்கள் பிடிவாதத்தை மாற்றி அமைத்துக் கொள்வது நல்லது. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவு செய்யாதீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் தேவைகள் பூர்த்தியாகும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற பதற்றம் ஏற்படும் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர போராடுவீர்கள்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் உங்கள் குடும்பத்தினருடைய ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் சிறுசிறு சண்டை சச்சரவுகள் வெறுப்பாக மாறாமல் பார்த்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அமைதி இருக்கும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் உங்கள் தடைகளை கண்டு தளராமல் எதையும் எதிர்க்கும் வல்லமையை பெறுவீர்கள். சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்க்கும் லாபம் பெருகும். புதிய பணியாட்களை அமர்த்துவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கக் கூடிய நல்ல நாளாக இருக்கும். கணவன் மனைவி இடையே பேச்சில் இனிமை தேவை.