மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் இடையில் நின்ற வேலைகளும் முடியும். சுப காரிய தடைகள் நீங்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பயணங்கள் அமையலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தடை இல்லாத வெற்றி கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை இருக்கும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேற்றப்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வீண் வழக்குகள் வரலாம் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மாற்றங்களை ஏற்க சிரமமாக இருக்கும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. எதிர்பாராத பயணங்கள் அனுகூல பலன் தரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பண தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிராகரிக்கப்படலாம்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுபவங்கள் பாடத்தை கற்றுக் கொடுக்க வாய்ப்புகள் உண்டு. சுற்றி இருப்பவர்களை புரிந்து கொள்வீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடங்களில் இருந்து நற்செய்தி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய எண்ணங்கள் சீராக இருப்பது நல்லது. தேவையற்ற குழப்பங்களை தவிர்த்து விடுங்கள். சுப காரிய முயற்சிகளில் மந்த நிலை காணப்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் திறமைக்கு உரிய பாராட்டுகளை பெறுவீர்கள்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நினைத்தது நடக்கக் கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்து வந்த சிறு சிறு மன கசப்புகள் மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வெளி வட்டாரங்களில் மரியாதை உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையற்ற வாக்குவாதங்களை வளர்க்காதீர்கள்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிமை தரக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. காலங்கள் பல கடந்து நினைவலைகள் சென்று விட்டு வரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கூட்டாளிகளுடன் இருந்து வந்து மனஸ்தாபம் மறையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு போட்டியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கண்ணால் காண்பதெல்லாம் சரியாக இருக்காது எனவே கவனம் வேண்டும். வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்க வேண்டாம். கணவன் மனைவி உறவில் விரிசல் வரக்கூடும் கவனம் வேண்டும். சுய தொழிலில் லாபம் உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகள் கைகூடும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அலைச்சல் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கிய ரீதியான வீண் விரயங்கள் வரலாம் கவனம் தேவை. குடும்ப ஒற்றுமையில் குறை இருக்காது. சுய தொழிலில் உள்ளவர்கள் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எவரையும் துணிச்சலுடன் எதிர்த்து போராடுவீர்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்ள முயற்சி செய்வது நல்லது. கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை தவறவிட வேண்டாம். சிறு தொழிலில் உள்ளவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிட்ட வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மனோதிடம் அதிகரிக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நிதானம் தேவைப்படக்கூடிய நாளாக இருக்கிறது. முன் கோபம் தேவையற்ற இழப்புகளை ஏற்படுத்தலாம். கணவன் மனைவி உறவுக்கிடையே அன்பு பெருகும். சுய தொழிலில் உள்ளவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதில் காலதாமதம் செய்யலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புது நட்பு மலரும் யோகம் உண்டு.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி ஒற்றுமையில் பலம் பிறக்கும். சுபகாரிய முயற்சிகளில் அலைச்சல் ஏற்படலாம். சுய தொழிலில் அதிரடி மாற்றங்கள் நடத்த முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் பூர்த்தியடையும்.