மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இழுபறியான வேலைகள் கூட சுலபமாக முடிவடைய கூடிய நல்ல நாளாக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும் காணப்படும். பெண்களுக்கு புதிய சிந்தனை தோன்றும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தீட்டிய திட்டங்கள் யாவும் இனிதே நிறைவேறும் நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்ப்புகள் வலுவாகும் என்பதால் பொறுமையை கையாளுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய நபர்களுடைய அறிமுகம் கிடைக்கும். பெண்களுக்கு சுறுசுறுப்பு காணப்படும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் இருக்கின்ற பயத்தை நீக்கி தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மற்றவர்களுடைய வேலையையும் சேர்த்து செய்ய வேண்டிய சூழ்நிலை காணப்படும், இதனால் டென்ஷனுடன் இருப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மற்றவர்களுடைய வார்த்தையில் கவனம் தேவை.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுமை தேவைப்படக்கூடிய நாளாக இருக்கிறது என்பதால் கவனம் தேவை. தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள். உங்களுடைய பணியில் மும்முரமாக ஈடுபடுங்கள். விட்டு சென்ற உறவுகளை நினைத்து வருத்தப்பட வேண்டாம். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் போராட்டம் நிறைந்த நாளாக இருக்கப் போகிறது என்பதால் கவனம் தேவை. முன்பின் தெரியாதவர்களின் அறிமுகத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் வலுவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு விவேகம் தேவை.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பலவீனத்தை அறிந்து செயல்படுவது நல்லது. எதையும் தாம் தூம் என்று செலவு செய்யக்கூடாது. ஆடம்பர செலவுகள் பொருளாதாரத்தை பிரச்சினைக்கு உள்ளாகி விடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு ராஜ தந்திரங்களை கற்றுக் கொள்ளும் பாக்கியம் கிடைக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் விலை உயர்ந்த பொருட்கள் மீது கவனம் தேவை. உங்களுடைய எண்ண அலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கப் போகிறது. பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத செலவுகள் வரலாம் எனவே முன்னெச்சரிக்கை தேவை.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் குதூகலம் காணப்படும். உற்றார், உறவினர்களின் வருகை மகிழ்ச்சிக்கு உரியதாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்க கூடிய நல்ல நாளாக இருக்கும். புதிய முதலீடுகள் செய்வதற்கு சிறந்த நாளாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் நினைத்தது நிறைவேறும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பேச்சில் இனிமை தேவை. தேவையற்ற விஷயங்களில் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்ப உறவுகளுக்கு இடையே விட்டுக் கொடுத்துச் செல்லுதல் நலம் தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேற விட்டாலும் வெற்றி உங்களுக்குத்தான். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிரடியான போட்டிகள் வலுவாகும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சிலர் நடந்து கொள்வார்கள். எனினும் பொறுமையுடன் இருப்பது நல்லது. அலட்சியம் இழப்புகளை ஏற்படுத்தும். பொருளாதார ஏற்றம் சிறப்பாக இருப்பதால் வீட்டு தேவைகளை எளிதாக பூர்த்தி செய்து விடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பால் உயரக்கூடிய நாளாக இருக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய ஆலோசனையை மற்றவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் உயரக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுடன் இணக்கம் ஏற்படும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தைரியம் பன்மடங்கு பெருக கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உடன் பிறந்தவர்கள் ஆதரவு கிடைக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு புத்துணர்ச்சி தரக்கூடிய இனிய நாளாக இருக்கிறது. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுபச் செய்திகள் உண்டு.