மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்கள் இன்று நல்ல பலன்களை பெற இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் அனுசரித்து செய்வது நல்லது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை. முன் கோவம் தவிர்ப்பது நல்லது. தம்பதியர் ஒற்றுமை நீடிக்கும். பூர்வீக சொத்துக்கள் ஆதாயம் தரும். ஆரோக்கியம் கவனம் கொள்ளவும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் இன்று எதிர்பாராத திருப்பங்கள் நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கிடைக்கக்கூடிய இடத்தில் இருந்து பணம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படலாம் எனவே பொறுமை காப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலும் சுறுசுறுப்புக்கு குறைவிருக்காது. கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் படிப்படியாக குறையும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்கள் இந்த நாள் நீங்கள் எதிர்கொள்ள கூடிய அனைத்து விஷயங்களையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். இதனையே தடைகளையும் தகர்த்து எறிந்து போராடுவீர்கள். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதுப்பொலிவு ஏற்படும். இனம் புரியாத மகிழ்ச்சி உள்ளுக்குள் நிறையும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்கள் இந்த நாள் நீங்கள் எதிர்கொள்ள கூடிய முக்கிய விஷயங்களை பொறுமையாக கையாளுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரித்து காணப்படும். புதிய பணி ஆட்களை நியமிக்கும் போது கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு நிதானம் தேவை. உங்களுடைய பேச்சு வார்த்தையில் இனிமையை இல்லாவிடில் பல பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்கள் இந்த நாள் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. தேவையற்ற பிரச்சனைகளை பற்றிய சிந்தனையில்லாமல் பணியில் கவனம் செலுத்துங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளிக்கும் தைரியம் பிறக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்கள் இந்த நாள் நீங்கள் இருக்க கூடிய முக்கிய முடிவுகளுக்கு பெரியவர்களை கலந்தாலோசிப்பது நல்லது. தேவையற்ற வீண் சிக்கலில் கொண்டு போய் விட்டு விடும் எனவே கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் பெரிய தொகையை ஈடுபடுத்தி அதிக லாபம் காண்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வருமான உயர்வு ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களுடைய சந்திப்பு நிகழும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கடமையில் கூட்டத்தில் கண்ணியம் தேவை. தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து அக்கறையுடன் செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தன்னம்பிக்கைக்கு கூடுதல் வலு சேர்க்கும் படியான நிகழ்வுகள் நடைபெறும். எதிர் வரும் பிரச்சனைகளை எளிதாக சமாளித்து முன்னேறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாகன ரீதியான வீண் விரயங்கள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடமையில் கூடுதல் கவனம் தேவை. உற்றார் உறவினர்களின் ஆதரவு குறையும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு பொறுமை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கூட்டு தொழில் புரியும் வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில்லாமல் அறிந்து கொண்டு இருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமையும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சாதுர்யமான முடிவுகள் மற்றவர்களை ஆச்சரியப்பட செய்யும். தகுந்த நேரத்தில் தகுந்த முடிவு எடுப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லை உருவாகும் என்பதால் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கிக் காணப்படும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தன்னம்பிக்கை உறுதுணையாக இருக்கக்கூடும். தோல்விகளை கண்டு துவண்டு போகாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரின் ஆதரவைப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். சரியான முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபம் காணலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுமை தேவை.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான நல்ல பலன்கள் கிடைக்கும். பூர்வீக சொத்து பலன்கள் உண்டு. கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நலம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நேர்மைக்கு உரிய பரிசு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் புதுப்பொலிவுடன் காணப்படுவீர்கள். உங்களுடைய உற்சாகம் மற்றவர்களை எளிதாக கவரும் வண்ணம் அமைய இருக்கிறது.