மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் உற்சாகம் தரும் நாளாக அமைய இருக்கிறது. விலகிச் சென்றவர்கள் கூட உங்களை திரும்பி வந்து அடைவார்கள். புதிய வரவு ஒன்று உங்கள் குடும்பத்திற்கு மகிழ்ச்சியைக் கொடுக்க இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு தேவையான நேரத்தில் நண்பர்களுடைய உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய முடிவுகளை எடுக்கும் பொழுது கவனம் தேவை. தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். இதுவரை உங்களை புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பணப்புழக்கம் கணிசமாக அதிகரித்து காணப்படும். பொருளாதார ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் முக்கிய வேலைகளை நீங்களே செய்வது மிகவும் நல்லது. மூன்றாம் மனிதர்களை நம்பி ஒப்படைக்கும் காரியங்கள் அனுகூல பலன் கொடுப்பதில் இடையூறுகள் கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த மறைமுகப் பிரச்சனைகள் தீர்ந்து ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறும் நல்ல நாளாக இருக்கும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நினைத்ததை சாதித்துக் காட்டும் அற்புத நாளாக அமைய இருக்கிறது. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகளை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் பலவீனத்தை அறிந்து போட்டியாளர்கள் செயல்பட நேரிடும் என்பதால் கூடுமானவரை விழிப்புணர்வு தேவை. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மதிப்பு உயரும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும் நாளாக இருக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்கும் சில விஷயங்களுக்கு நேர்மறையான பலன்கள் உண்டாகும். எதிலும் தாமதம் ஏற்பட்டாலும் வெற்றி உங்கள் பக்கம் தான். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடையில்லாமல் வெற்றி பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பழைய சரக்குகளை விற்பதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய விஷயங்களில் ஈடுபடுவதற்கு முன்பு ஒன்றுக்கு இரண்டு முறை ஆலோசனை செய்து கொள்வது நல்லது.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் எதிலும் ஜெயம் உண்டாகும் அற்புத நாளாக அமைய இருக்கிறது. புதிய திட்டங்களை தீட்டி புதிய யுத்திகளை கையாண்டு மற்றவர்களுடைய கவனத்தை எளிதாக ஈர்ப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அனாவசிய செலவுகள் ஏற்படும் என்பதால் கூடுமானவரை சிக்கனத்துடன் இருப்பது நல்லது. சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் உடைய ஆதரவைப் பெறுவதில் இடையூறுகள் ஏற்படலாம். ஆரோக்கியம் மேம்படும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். கணவன் மனைவிக்கு இடையே தேவையற்ற சண்டை சச்சரவுகள் ஏற்படும் என்பதால் கூடுமானவரை மௌனம் காப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பழைய பாக்கிகள் வசூல் ஆகும் யோகம் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்ததை சாதித்துக் காட்டும், தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்கள் உடன் பிறந்தவர்கள் உடைய ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய திட்டங்கள் தீட்டும் எண்ணம் மேம்படும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சில நெருக்கடிகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இழுபறியில் இருந்த சில வேலைகள் முடிவுக்கு வரும். எதிர்பாராத நேரத்தில் நண்பர்களுடைய உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தொலைதூரத்தில் இருந்த சுப செய்திகள் கிடைக்கும். வழக்குகள் தொடர்பான விஷயங்களில் சாதகமற்ற பலன்கள் உண்டாகும் என்பதால் கூடுமானவரை கவனத்துடன் இருப்பது நல்லது.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் கூடுதல் உழைப்பை கொடுக்க வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்து காணப்படும் என்பதால் கவன சிதறல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் நெருக்கடிகள் ஏற்பட்டு மறையும். உங்களை சுற்றி இருப்பவர்கள் உடைய சூழ்ச்சிகளை முறியடித்து காட்டுவீர்கள். தந்தைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காண்பீர்கள். பூர்வீக சொத்துக்கள் அனுகூல பலன் கொடுக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் எளிதாக செய்து முடிக்க வேண்டிய வேலையை கூட சிரமப்பட்டு செய்து முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் எதையும் போராடித்தான் பெற வேண்டியிருக்கும். திருமண விஷயங்களை சற்று தள்ளிப் போடுவது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் உடைய ஆதரவு கிடைக்கும். உங்கள் மீது சுமத்தப்பட்ட வீண் பழிகள் மறையும். தன்னம்பிக்கையும், தைரியமும் இருந்தால் வெற்றி நிச்சயம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் கோபத்தை கட்டுப் படுத்துவதன் மூலம் சில இழப்புகளை தவிர்க்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். கூட்டாளிகள் உடைய ஆதரவு கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகளில் சாதகப் பலனைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய திறமையை வெளிக்கொணர கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. மற்றவர்கள் வியக்கும் வண்ணம் சில விஷயங்கள் நடக்கும்.