மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தன்னம்பிக்கையுடன் செயல்பட கூடிய நல்ல நாளாக இருக்கும். புதிய பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் செலுத்துங்கள். சுய தொழிலில் இருப்பவர்கள் எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகளைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் பணிச் சுமையை ஏற்படுத்தும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதுமையை படைக்கக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. உங்களுடைய உற்சாகம் மற்றவர்களையும் தொற்றிக் கொள்ளும் அளவிற்கு அதிகமானதாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புணர்வு தேவை. பங்குதாரர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய அனுபவங்கள் ஏற்படும்.
மிதுனம்:மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு சவால் நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. எதையும் துணிச்சலாக எதிர்கொள்வீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். கணவன் மனைவிக்கு இடையே புதிய புரிதல் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெளிவட்டாரத்தில் நட்பு மலரும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பேச்சில் இனிமை கடைபிடிப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் உதவிக்கரம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் தேவை. வெளி இடங்களில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் வலுபெறும் வாய்ப்புகள் உண்டு என்பதால் கவனம் தேவை.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மற்றவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற வார்த்தைகள் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். பணம் பல வழிகளில் கிடைத்து பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்யும். உத்தியோகஸ்தர்கள் எதிலும் பதட்டப்படாமல் முடிவெடுப்பது நல்லது.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அரசு வழி காரியங்களில் கவனம் தேவை. தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம் என்பதால் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெளியிடங்களில் மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உற்சாகமான நாளாக அமைய இருக்கிறது.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு பெரிய மனிதர்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் புதிய அங்கீகாரத்தை கொடுக்கும். உங்கள் வேலைகளை திறம்பட செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வீண் விரையங்கள் ஏற்படும் என்பதால் ஆடம்பரத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இறைவழிபாடு களின் மீது அதிக ஆர்வம் தென்படும். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய முயற்சிகளில் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வீர்கள். மரியாதை உயரும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மாற்றம் நிறைந்த இனிய நாளாக அமைய இருக்கிறது. நீண்ட நாள் நீங்கள் மாற்ற நினைக்கும் ஒன்றை மாற்றி காண்பிப்பீர்கள். நேர்மறையான அணுகுமுறை மற்றவர்களிடம் உங்களுடைய மதிப்பை கூட்டிக் காட்டும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும் இதனால் டென்சனுடன் காணப்படுவார்கள்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் எப்போதும் சாதுரியமாக செயல்படுவது நல்லது. தேவையற்ற விஷயங்கள் உங்கள் மனதை போட்டு அழுத்திக் கொண்டிருக்கும். பழைய கசப்பான நினைவுகளை மறந்து நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. முடிந்தால் யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொள்ளலாம். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிகம் பொறுமை தேவைப்படக்கூடிய நாளாக இருக்கிறது. மூன்றாம் மனிதர்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு இடியாப்பச் சிக்கல் போல் இருக்கும் பிரச்சினை கூட எளிதாக முடியும். திடீர் அதிர்ஷ்டம் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். பேச்சுவார்த்தைகளில் இனிமை தேவை