மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய போகிறது. குடும்பத்தில் எதிர் பாராத நபர்களின் வருகை மகிழ்ச்சியை உண்டாக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு வருமானம் உயரக் கூடிய அமைப்பு உண்டு. உத்யோகஸ்தர்களுக்கு பயணங்கள் மூலம் அனுகூல பலன் கிட்டும். தொலைதூர போக்குவரத்து விஷயத்தில் எச்சரிக்கை தேவை. ஆரோக்கியம் மேம்படும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வழக்கத்தை விட கூடுதல் முயற்சி செய்வது அனுகூல பலன் கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொருளாதார ரீதியான வளர்ச்சி சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை குறைய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு நீங்கள் நினைத்ததை நடத்திக் காட்டக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திருப்பங்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நினைத்ததை நடத்திக் காட்டும் வாய்ப்புகள் அமையும். தொடர் வெற்றிகள் குவியும் அற்புதமான நாளாக இருப்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் பொறுமை தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மேன்மை தரக் கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தடைபட்ட காரியங்கள் தடையில்லாமல் நிறைவேறும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும் காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு செய்த செயலுக்கு பாராட்டுகள் கிடைக்கும் நல்ல நாள் ஆகும். உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற கடன் ஏற்படலாம் எச்சரிகை தேவை.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் தரக்கூடிய அமைப்பு என்பதால் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயலாற்றுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் வெளியிட பயணங்களின் பொழுது உங்களுடைய பொருட்கள் மீது கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விடா முயற்சி வெற்றியை கொடுக்கும். தோல்விகள் பல வந்தாலும் தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புத்துணர்வுடன் செயல்பட கூடிய இனிய நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு காரணமாக உடல் சோர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் ஏற்படும் சிறுசிறு பாதிப்புகளையும் உடனுக்குடன் கவனித்து கொள்வது நல்லது.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் என்பதால் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதால் பொறுப்பாக செயல்படுவது நல்லது. அலட்சியம் தேவையற்ற இழப்புகளை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஆடம்பரப் பொருட்களை கையாளும் பொழுது கவனம் தேவை.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கப் போகிறது. நீங்கள் நினைத்ததை அடைய போகிறீர்கள். கணவன் மனைவி இடையே இருக்கும் நெருக்கம் மேலும் அதிகரிக்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நட்புறவு மேம்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் மேலோங்கி காணப்படும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிலும் தேர்ச்சி அடைய கூடிய வாய்ப்புகள் உள்ளதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உயர்வு ஏற்படும். சமூகத்தில் உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இறைவழிபாட்டின் மீது அதிக ஆர்வம் காணப்படும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் நிதானமாக செயலாற்றுவதன் மூலம் அனுகூல பலன் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் வீண் கோபத்தை தவிர்த்து கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகள் மேலும் வலுவாக்கும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள்பொது இடங்களில் இன்முகத்துடன் பேசுவது நல்லது.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வெற்றிவாகை சூட கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் நிறைவு ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் உயர கூடிய வாய்ப்புகள் அமையும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகளில் இருந்து விடுபட இருக்கிறீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் அமைதியாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புகழ் ஓங்கி இருக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் மனக் கசப்புகளை பேசித் தீர்த்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கிறது. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. ஆரோக்யம் சீராகும்.