மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எளிதில் மற்றவர்களை நம்பி விடக்கூடிய ஆபத்து உள்ளதால் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கையில் காசு புழங்கும். குடும்பத்தில் இருக்கும் மூத்த நபர்களை உதாசீனப்படுத்தாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூல பலன் தரக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெளியிட பயணங்களின் பொழுது புதிய நட்பு வட்டம் விரிவடையும். கூட்டுத் தொழிலில் இருப்பவர்களுக்கு அமோகமான பலன்கள் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு நினைத்ததை அடைய அதிகம் பொறுமை தேவை. ஆரோக்கியம் சீராகும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய எண்ணங்கள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதால் எடுக்கக்கூடிய முடிவுகளில் கவனமாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் உங்களுடைய தேவையற்ற முன்கோபத்தை தள்ளி வைத்து விட்டு இன்முகத்துடன் பேசுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டத்தை பெறுவீர்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடமையில் கூடுதல் அக்கறை தேவை. அலட்சியம் பல இழப்புகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளிவிடும் எனவே கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் தேடி வந்து சேரும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகளை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உங்களுடைய திறமையை மேலும் மெருகேற்ற கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய எதிர்பாராத மாற்றம் மற்றவர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைய இருக்கிறது. உங்களை நீங்களே செதுக்கிக் கொள்ள முயற்சி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பண ரீதியான விஷயங்களில் கவனம் தேவை. மூன்றாம் மனிதர்களை நம்பிப் புதிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு சமூகத்தின் மீதான அக்கறை அதிகரிக்கும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நம்பிக்கை பன்மடங்கு பெருக இருக்கிறது. எப்படியாவது முன்னேறி விடுவோம் என்கிற தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். நினைத்த இடங்களிலிருந்து புதிய செய்திகள் கிடைக்கும். வேலையை தேடி அலைந்து கொண்டு இருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை கிடைத்து செட்டில் ஆகிவிடுவார்கள். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சாதக பலன் உண்டு.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு பல எதிர்ப்புகள் வந்தாலும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பனிப்போர் நீங்கும். சுய தொழிலில் ஏற்றம் காணும் பாக்கியம் உண்டு. புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு துறைசார் நிபுணர்களின் ஆலோசனை தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு நேர்மறையான அணுகுமுறை வெற்றி வாய்ப்பை தரும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நீண்ட நாள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். தடைப்பட்ட திருமண சுப காரிய முயற்சிகள் கைகூடிவரும். நீண்ட நாள் போராட்டத்திற்கு விடிவு காலம் பிறக்கும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு புதிய தொழில் நுட்பங்கள் தொடர்பான விஷயங்களை வாங்க கூடிய யோகம் உண்டு. ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தன்னம்பிக்கைக்கு வெற்றிகள் பல குவிக்கக் கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். உங்களுக்கு இடையூறாக இருந்தவர்கள் தானாகவே விலகி சென்று விடுவார்கள். குடும்பத்தில் உங்களைப் புரிந்து கொள்ளாத நபர்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோக ரீதியான வருமான உயர்வு ஏற்படும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனக்குறைகள் நீங்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. எதிலும் பொறுமையை கையாள வேண்டும், அவசர முடிவுகள் ஆபத்தை கொடுக்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடீர் அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படும் என்பதால் எச்சரிக்கை தேவை.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தினர் மீது இருந்து வந்த அக்கறை அதிகரித்துக் காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உடனிருப்பவர்களே எதிராக செயல்படக் கூடும் என்பதால் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண் பழிகள் உண்டாகும் என்பதால் கவனம் தேவை. கண்ணால் காண்பதை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய உடல் வலிமை அதிகரிக்கும். மனோதிடம் கூடும் இனிய நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் மேலும் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கிடைக்க வேண்டிய இடத்திலிருந்து பணவரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு வாங்கும் யோகம் உண்டு.