மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் புதிய நண்பர்களின் அறிமுகம் பெறுவார்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை வலுவாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுலபமான விஷயங்கள் கூட சிரமமாக இருக்கும் எனவே கவனம் தேவை. குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய உத்வேகம் பிறக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேல் அதிகாரிகளுடன் நட்புறவாடுவது நல்லது. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். குடும்ப உறவுகளுக்கு இடையே பாசம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நேர்மறையான சிந்தனை தேவை. குறுக்குவழி ஆபத்தை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் குறையும் எனவே ஆடம்பரத்தை குறைத்துக் கொள்வது நல்லது.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதற்கு இடையூறுகள் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தில் பெரியவர்களை மதித்து நடப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எடுக்கும் முடிவுகளில் சாதக பலன் உண்டு.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முழு முயற்சி வெற்றியை கொடுக்கும். தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் பேச்சில் இனிமையை கடைபிடிப்பது நல்லது. வாடிக்கையாளர்கள் இடத்தில் நாணயமாக நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் வருமானம் கிடைக்கும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவது நல்லது. குடும்ப உறவுகளுக்கு இடையே வாக்கு வாதங்கள் தவிர்க்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக போட்டியாளர்கள் வலுவாகும் என்பதால் சமயோசிதமாக முடிவெடுப்பது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சனைகளை பெரிதாகாமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வேகத்தை விட விவேகம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். ஆரோக்கிய பாதிப்புகளை உடனுக்குடன் கவனிப்பது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறப்பான நல்ல நாளாக அமைய இருக்கிறது. தேவையற்ற விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் புதிய உத்திகளை கையாளுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண் பழி சுமக்க கூடிய சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புதமான நாளாக இருக்கிறது. குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்து சமாதானமாக செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சிரமமான வேலையும் சுலபமாக முடியும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனம் நிறையும் படியான நிகழ்வுகள் நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பண ரீதியான விஷயத்தில் சாதகமான பலன்கள் உண்டு. உற்றார், உறவினர்களின் ஆதரவு பெருகும். நீங்கள் எடுக்கக்கூடிய புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு மன இறுக்கம் குறையும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சொந்த புத்தியுடன் செயல் படுவது நல்லது. அடுத்தவர்கள் பேச்சை கேட்டு முடிவு எடுக்காதீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு கீழ் பணிபுரியும் பணியாளர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைப்பதில் சாதக பலன் உண்டு.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய திறமைகளை வெளி உலகிற்கு காட்ட கூடிய நல்ல நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அடங்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.