மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் நடக்கவே நடக்காது என்று நினைத்த காரியம் ஒன்று நடக்க இருக்கிறது. தொலைதூர பிரயாணங்கள் மேற்கொள்ளும் பொழுது கவனம் தேவை. சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுமை தேவை.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. கனவில் கண்ட ஒரு விஷயம் நேரில் நடப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பிரச்சனைகளை கொடுத்து வந்த எதிரிகளின் தொல்லை நீங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை கூடும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு சாதக பலன்களை பெற இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற வீண் அலைச்சல் ஏற்படலாம். கணவன் மனைவி உறவில் நெருக்கம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அமைதி தேவை.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்வதை தவிர்ப்பது நல்லது. பொருளாதார ரீதியான வளர்ச்சி சிறப்பாக இருக்கும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலிட எதிர்ப்புகள் வலுவாகும் என்பதால் பொறுமை காப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் அனுகூலமான நல்ல பலன்களைக் காண இருக்கிறீர்கள். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும். சுய தொழிலில் மந்த நிலை காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு பெருகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தடைகளைத் தாண்டி முன்னேற கூடிய நாளாக இருக்கும். உங்களை சுற்றியிருப்பவர்களின் கேலி, கிண்டல்களை பொறுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை. தொழில் மற்றும் வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராகும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் செய்ய நினைத்ததை செய்து காட்டுவீர்கள். தேவையற்ற நபர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. சுய தொழிலில் லாபம் பெருகும். புதிய சொத்துக்கள் வாங்கும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை கூடும் இதனால் டென்சனுடன் காணப்படுவார்கள்.
விருச்சிகம்:
விருசிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகள் வலுவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு சவாலான விஷயங்களை கூட எளிதாக முடித்து விடும் வாய்ப்புகள் உண்டு. நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது போல உங்களுடைய பொறுமை உங்களை காக்கும். சுய தொழிலில் ஏற்றம் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற நெருக்கடிகளை உண்டு பண்ணுவார்கள். எதையும் சாதுரியமாக கையாளுவது நல்லது.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் இனிய பலன்களை காணலாம். உங்களை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்வார்கள். கணவன் மனைவி உறவுக்குள் இருக்கும் பிரச்சனைகளை வெளியில் பேசிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. சுய தொழிலில் லாபம் பெருகும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற வார்த்தைகளை பிரயோகிக்க மேல் பொறுமை காப்பது நல்லது. தொலை மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றத்தை காண இருக்கிறீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் திறமைக்கு உரிய பலன்கள் கிடைக்க இருக்கிறது. புதிய நட்பு வட்டம் விரியும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துணிச்சலாக செயல்படக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பண ரீதியான வீண் விரயங்கள் ஏற்படலாம். திட்டமிட்டு செயல்படுவது உசிதமானது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை கூடும். பெண்களுக்கு ஓய்வு தேவை. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.