மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் சிலருக்கு மனதளவில் குழப்பங்கள் இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவது, புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை தவிர்க்க வேண்டும். வீட்டில் இருப்பவர்களுக்கு மருத்துவ செலவுகள் ஏற்படலாம்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். கோர்ட் வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த காரியம் வெற்றிகரமாக முடியும்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் செல்வாக்கு நிறைந்த நாளாக இருக்கும். உயர் அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் மற்றும் மனம் உற்சாகமாக காணப்படும்.
கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் புதியவற்றை கற்றுக் கொள்வதில் ஆர்வம் இருக்கும். தாய் மாமன் வழியில் தனவரவு உண்டாகும். தொழில், வியாபாரங்களில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.
சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் மேன்மை நிறைந்த நாளாக இருக்கும். சிலருக்கு குழந்தைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படும். உடன்பிறந்தோரின் ஆதரவு இருக்கும்.
கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் தன்னம்பிக்கை கூடும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். தாமதமான பண வரவுகள் வந்து சேரும். தம்பதிகளிடையே ஒற்றுமை கூடும்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் இன்பங்கள் மிகுந்த நாளாக இருக்கும். பயணங்களால் லாபம் ஏற்படும். பழைய கடன்களை எல்லாம் வட்டியுடன் அடைத்து விடுவீர்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்று நன்மை நிறைந்த நாளாக இருக்கும். சுபகாரியங்களில் கலந்து கொள்வீர்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர் பயணங்கள் வெற்றிகரமாக முடியும்.
தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் பெருமை நிறைந்த நாளாக இருக்கும்.. மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். பணியிடத்தில் சிறப்பாக செயல்பட்டு பிறரின் பாராட்டை பெறுவீர்கள். சொத்துக்கள் தொடர்பான விடயங்களில் வெற்றி உண்டாகும்.
மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் நிறைவான நாளாக இருக்கும். சிலர் மகான்களின் தரிசனத்தை பெறுவார்கள். புதிய முயற்சிகளில் தைரியமாக ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். அந்நிய நபர்களால் ஆதாயம் ஏற்படும்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் உற்சாகமான நாளாக இருக்கும். சிலர் கோயில்களுக்கு சென்று வருவார்கள். பெரியோர்களின் ஆசிகள் முழுமையாக கிடைக்கும். பணியிடத்தில் அலைச்சல் ஏற்பட்டாலும் அதனால் நன்மை ஏற்படும்.
மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் லாபகரமான நாளாக இருக்கும். கொடுக்கல் – வாங்கலில் இருந்த இழுப்பறி நிலை தீரும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் நன்மைகள் ஏற்படும். ஒரு சிலர் புதிய வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகம் ஏற்படும்.