மேஷம்:
மேஷ ராசியில் பிறந்த நீங்கள் இன்று நிறைய நன்மைகளைப் பெற இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பகைவர்களின் தொல்லை வெறுப்பை உண்டாக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். கணவன் மனைவி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். ஆரோக்கியம் பலம் பெற அக்கறை செலுத்துங்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்த நீங்கள் இன்று நினைத்ததை சாதித்துக் காட்டுவீர்கள். உங்களை உதாசீனப்படுத்திய பலரையும் ஆச்சரியப்பட வைப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வெளி நபர்களுடைய நன்மதிப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். வெளியிட பயணங்களின் போது கவனம் தேவை. ஆரோக்கியம் சீராக இருக்கும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்த நீங்கள் இன்று எதிலும் வெற்றி காண கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்துடன் இறை வழிபாடுகளில் ஈடுபடும் யோகம் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் மேலும் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். புதிய தொழிலில் அதிர்ஷ்டம் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் குறையும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்த நீங்கள் இன்று தொட்டதெல்லாம் துலங்க கூடிய வகையில் அமைப்பு உள்ளது. தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும் யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். பெரிய தொகையை ஈடுபடுத்தி அதிக லாபம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. குடும்ப பிரச்சனைகள் தீர விட்டு கொடுத்து செல்வது நல்லது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்த நீங்கள் இன்று தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது மிகவும் நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வீண் விரையங்கள் ஏற்படும் என்பதால் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில்இருப்பவர்கள் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளை மூன்றாம் மனிதர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது உத்தமம். ஆரோக்கியம் பலப்படும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்த நீங்கள் இன்று எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து பின் முடிவு எடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் மேலும் வலுவாக வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் சலுகைகளும், வருமானமும் உயரும். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். ஆரோக்கியம் கவனம் தேவை.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்த நீங்கள் இன்று எடுக்கும் முடிவுகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் அனுகூலமான பலன்களை பெற இருக்கிறீர்கள். கணவன் மனைவிக்கிடையே நடக்கும் கருத்து வேறுபாடுகளை விடுத்து அமைதி காப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளால் பணிச்சுமை கூடும். ஆரோக்கியம் கவனம் வேண்டும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்த நீங்கள் இன்று எதையும் துணிச்சலுடன் செய்யும் தைரியம் பிறக்கும். தேவையற்ற அறிமுகங்களை தவிர்த்துக் கொள்வது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் அதிர்ஷ்டம் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட தூர பயணங்கள் மூலம் அனுகூல பலன் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு அமையும். ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் குறையும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்த நீங்கள் இன்று சிந்திக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் வெற்றி காண கூடிய அற்புத வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எடுக்கும் பொழுது உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்களைப் பற்றிய புரிந்துணர்வு அதிகரிக்கும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்த நீங்கள் இன்று எதிலும் நண்பர்களின் ஆதரவை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பெரிய மனிதர்களின் ஆதரவு பெருகும். மனைவிவழி உறவினர்கள் மூலம் நன்மைகளைப் பெறுவீர்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றி தரும் வகையில் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகள் மேலும் அதிகரிக்கும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்த நீங்கள் இன்று பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சமாளிப்பீர்கள். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்ச்சி கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் அனுபவ பூர்வ நடவடிக்கைகளை எடுப்பார்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சில சூட்சமங்களை கற்றுக் கொள்ளும் யோகம் உண்டு. உங்கள் பிரார்த்தனைகள் நிறைவேற கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. ஆரோக்கியம் சீராக இருக்கும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்த நீங்கள் இன்று எதற்கெடுத்தாலும் மற்றவர்களை குறை கூறுவதை விட்டுவிட்டு இன்முகத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இல்லம் தேடி புதிய செய்திகள் வந்து சேரும். உத்யோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்வீர்கள். திறமைக்கு உரிய அங்கீகாரம் பெறுவீர்கள். தந்தைவழி உறவினர்கள் மூலம் அனுகூல பலன் பெறுவீர்கள். ஆரோக்கிய ரீதியான முன்னேற்றம் சீராக இருக்கும்.