மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்சாகம் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு பணம் வரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சவால் நிறைந்த நாளாக இருக்கப் போகிறது.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. தொலைதூர இடங்களில் இருந்து சுப செய்திகளை பெறலாம். கணவன் மனைவி இடையே விரிசல் விழாமல் இருக்க விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சுய தொழிலில் மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு அதிகரிக்கும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய தனிப்பட்ட திறமைகளை வளர்த்துக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் கடினமான சவாலான விஷயங்களை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் படிப்படியாக குறையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பொறுமையை இழக்க வாய்ப்புகள் உண்டு கவனமாக இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் அளவிற்கு லாபம் இருக்கும். சொத்து பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வர வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு தேவை என்பதால் இணக்கமாக செல்வது நல்லது.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிந்தனை நேர்மறையாக இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் தேவை இல்லாமல் மற்றவர்களை பகிர்ந்து கொள்ளாமல் விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்லுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் போராட்டம் முடிவுக்கு வரும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் எச்சரிக்கை வேண்டும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடமையில் இருந்து பின் வாங்காமல் இருப்பது நல்லது. எடுத்தோம் கவிழ்தோம் என்று எதையும் செய்ய வேண்டாம். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். சுய தொழிலில் மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சோர்வு தட்ட வாய்ப்புகள் உண்டு.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வளம் தரும் இனிமையான நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மெல்ல மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பாராத வகையில் சில மாற்றங்கள் நடக்கும். மனதில் இருக்கும் குழப்பங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் தனி திறமையை மேலும் வளர்த்துக் கொள்வது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுகம் தரும் நல்ல நாளாக இருக்கப் போகிறது. எவரையும் கலந்த ஆலோசிக்காமல் செய்ய முடிவு எடுப்பது உசிதமானது. கணவன் மனைவி இடையே சிறு சிறு சண்டை சச்சரவுகள் அவ்வப்போது வந்து நீங்கும். சுய தொழிலில் லாபம் பெருகும். உத்தியோகத்தில் வேலையின் மீது பொறுப்புகள் அதிகரிக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சில விஷயங்களை துணிச்சலோடு எதிர்கொள்வதற்கு வாய்ப்புகள் உண்டு. தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். சுயதொழிலில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் இருந்து வந்த தொய்வு நிலை மாறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு போட்டிகள் கடுமையாகும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைத்து கொள்ள வேண்டாம். கணவன் மனைவி உறவுக்கு இடையே இருக்கும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது நல்லது. சுய தொழிலில் ஏற்றம் காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வருமானம், பதவி உயர்வு பெருக கூடிய வாய்ப்புகள் உண்டு.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் பேராசை பெரும் நஷ்டம் என்பதை மனதில் வைத்து செயல்படக்கூடிய நாளாக இருக்கிறது. எதிர்பார்த்த விஷயங்கள் காலதாமதம் ஆகலாம். கணவன் மனைவி இடையே ஒற்றுமை ஓங்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சுற்றி இருப்பவர்களுடன் இருந்து வந்து மனக்கசப்புகள் மாறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பிரிந்தவர்கள் தேடி வருவார்கள்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வாழ்வில் ஒளி தரும் நல்ல நாளாக அமையப் போகிறது. இதுவரை இருந்து வந்த தடைகள் அகன்று நீங்கள் வெற்றி நடை போட இருக்கிறீர்கள். புதிய விஷயங்களில் நீங்கள் ஆர்வமாக ஈடுபடுவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத அனுபவங்கள் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக பணியாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.