மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எவரையும் எதிர்க்கும் வல்லமை பிறக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை இன்மை மற்றவர்களுக்கு சாதகமாக அமையக் கூடும் என்பதால் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணவரவு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லை குறையும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உடல் உழைப்பு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகஸ்தர்கள் பொறுமையை கடைபிடிப்பது நல்லது.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனதிலிருக்கும் கேள்விகளுக்கு விடை கிடைக்கக் கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற எதிர்ப்புகள் வழுவாவதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் வரும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிந்தனை நேர்மறையாக சிந்திக்க கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வரவை விட செலவு அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு பெருகும். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனம் தெளிவாக சிந்திக்கும். உங்களை சுற்றி நடக்கும் நல்லவைகளை அறிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர ஆரம்பிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு விடாமுயற்சி வெற்றி தரும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய வெற்றியில் மற்றவர்களுடைய பங்களிப்பும் அதிகமாக இருக்கக்கூடும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் ஈடுபடுங்கள் வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் காலதாமதமாக வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேன்மை உண்டாகும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உடற்சோர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தேவையான ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவியிடையே மனக்கசப்புகள் குறையும். சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய சாதனைகள் படைக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிரமம் பார்க்காமல் உங்களுடைய கடமைகளை சரிவர பூர்த்தி செய்து விடுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உயர்வு உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வகையில் சில மன கஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் மனதை வலிமையாக்கி கொள்வது நல்லது.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற சினம் தவிர்ப்பது நல்லது. உங்களுடைய முன்கோபம் தேவையற்ற இழப்புக்களை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்யாதீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அமைதி தேவை. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.
மகரம்:
மகரத்திற்கு பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய புகழ் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. சமூகத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் தொடர் சரிவில் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் பெருகும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே அன்னியோன்யம் கூடும். பிள்ளைகள் மூலம் சில நல்ல செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளிநாடு மற்றும் வெளியூர் தொடர்பான விஷயங்களை சாதகப்பலன் உண்டாகும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகளும் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விவேகம் தேவை. உங்களை சுற்றி இருக்கும் பகைவர்களின் தொல்லை ஒழியும். எடுக்கக்கூடிய புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.