மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு கவலைகள் நீங்கி மகிழ்ச்சியுடன் காணக்கூடிய ஒரு நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவை அறிந்து செலவு செய்வது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்துக் காட்டுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு எடுத்து வைக்கக் கூடிய ஒவ்வொரு அடியிலும் வெற்றி நிச்சயம். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுப காரியத்தில் இருந்து வந்த தடைகள் விலகி வெற்றி காண கூடிய நன்மைகள் உண்டாகும். வீண் பேச்சு வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எடுக்கக்கூடிய முடிவுகளில் கவனம் தேவை. உங்கள் உடனிருப்பவர்களே உங்களுக்கு சாதகமற்ற செயல்களை செய்யக்கூடும் என்பதால் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. தொலை தூர இடங்களில் இருந்து நல்ல செய்திகளை பெறுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை பலப்படும். ஆரோக்கியம் சீராகும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பொறுப்புணர்வு அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரக்கூடிய இனிய நாளாக இருக்கிறது. கணவன் மனைவியிடையே இருக்கும் பேச்சு வார்த்தைகளில் கவனம் தேவை. தேவையற்ற பொழுது போக்குகளைத் தவிர்த்து வேலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உடல்நிலையை கவனிக்க வேண்டும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் ஒற்றுமையின் பலம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய வீடு கட்டும் எண்ணம் உள்ளவர்களுக்கு அதற்கான ஒரு பாதை தென்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு விஷயத்திலும் உங்களுடைய பங்களிப்பு அதிகமாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நெடிய பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் இருக்க கூடிய முடிவுகளில் குழப்பங்கள் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை. கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பயணங்களின் பொழுது கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எதிர்பாராத நபர்களின் வருகை உற்சாகத்தை கொடுக்கும். காரிய தடைகள் விலகி வெற்றி வாகை சூடுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் விரும்பிய விஷயங்களை அடைவதில் இருந்து வந்த தடைகள் விலகும் நல்ல நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் பொருளாதார முன்னேற்றம் சீராகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் என்று நினைத்தது ஒன்று நடக்கும். தேவையற்ற எதிர்பார்ப்புகளை தவிர்த்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களுடைய நேரத்தை தேவையில்லாமல் விரயம் செய்வதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் திறமைகளை மேலும் மெருகேற்றிக் கொள்வீர்கள்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனம் மகிழும் படியான நல்ல நிகழ்வுகள் நடக்க போகிறது. சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றி கொடுக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமையும், அன்பும் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் விலகி லாபம் காண கூடிய யோகம் உண்டு. ஆரோக்கியம் மேம்படும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் விட்டு விட நினைத்த விஷயம் ஒன்றை விட்டு விடுவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை கண்டு கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான ஏற்றம் சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்பின் தெரியாதவர்களின் அறிமுகம் தவிர்ப்பது நல்லது.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் இருக்க கூடிய முடிவுகள் உங்களுக்கு சாதக பலன்களை கொடுக்க இருக்கிறது. கணவன் மனைவி இடையே இருக்கும் பேச்சுவார்த்தைகளில் இனிமை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வம்பு வழக்குகளில் ஈடுபடாமல் தவிர்ப்பது உத்தமம்.