மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அமைதி தரும் சூழ்நிலையாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் தேவையற்ற சண்டைகள் வராமல் இருக்க வீண் வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சுய தொழிலில் லாபம் பெருக விடா முயற்சி செய்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துவது நல்லது.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் தரும் அமைப்பாக இருக்கிறது. சுபகாரிய முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சமூகத்தின் மீதான அக்கறை அதிகரிக்கும். இறைவழிபாட்டில் நாட்டம் உண்டாகும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பங்குதாரர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஆரோக்கியம் மேம்படும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்து காட்டுவதில் இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி நிலவ அனுசரித்து செல்வது நல்லது. சகோதர சகோதரிகளுக்கு இருந்து வந்த மனக்கசப்புகள் தீர்வுக்கு வரும். தேவையற்ற மூன்றாம் நபர்களின் அறிமுகத்தை தவிர்ப்பது நல்லது. சுய தொழிலில் ஏற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். பொருளாதார ரீதியான ஏற்றம் சிறப்பாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் பெறுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சாதகப்பலன் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் உள்ள அமைப்பு என்பதால் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களின் சந்திப்பு அமையும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதிற்கு மகிழ்ச்சியான நல்ல நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சமூகத்தின் மீதான பார்வையை மாற்றிக் கொள்வீர்கள். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்றம் காண கூடிய அமைப்பாக இருப்பதால் நல்ல லாபம் காணலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும், எதிர்பார்க்கும் சலுகைகள் பெறுவீர்கள்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துணிச்சலான முடிவுகளை எடுக்கும் நல்ல நாளாக அமைய இருக்கிறது. சுயமாக சிந்தித்துச் செயலாற்றுவது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பெரிய வரவேற்பை பெறும் வகையில் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மனதில் இருந்த குழப்பங்கள் தீரும். வெளியிட பயணங்களின் போது எச்சரிக்கை தேவை.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் விரும்பிய விஷயங்களில் வெற்றி காணும் யோகம் உண்டு. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்கு உரிய பாராட்டுகள் கிடைக்கும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. பிள்ளைகள் வழியில் சுபச் செய்தி உண்டு.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திடீர் அதிர்ஷ்டம் வரும். இதுவரை வசூலாகாத பழைய பாக்கிகள் வசூலாகும் யோகமுண்டு. தேவையற்ற இடங்களில் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி உறவில் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுய தொழிலில் மந்த நிலை காணப்படும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு பெருகும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி கொடுக்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு விருத்தி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொல்லை கொடுக்கும் எதிரிகளை துணிச்சலுடன் சமாளிப்பீர்கள். ஆடம்பர பொருள் சேர்க்கை உண்டு.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் தீர்வுக்கு வரும். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வீர்கள். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பழைய சரக்குகள் விற்பனை ஆகிவிடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நேர்மையாக இருப்பது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்க்கும் விஷயங்களில் வெற்றி வாகை சூடுவீர்கள். சாதகமுள்ள அமைப்பு என்பதால் தடைபட்ட காரியங்கள் நிறைவேறும். தந்தை வழி உறவினர் மூலம் ஆதாயம் பெருகும். மற்றவர்களுக்கு உதவும் மனம் படைத்த உங்களுக்கு தகுந்த சமயத்தில் நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைகள் படிப்படியாக நீங்கும்