மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக அமைய போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்ததை விட அதிக லாபம் காணலாம். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு மனநிலையில் சீரற்ற தன்மை இருப்பதால் கவனச் சிதைவு ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்பதால் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சக ஊழியர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் திறமைகளை வெளிக் கொணர்வதற்கு வாய்ப்புகள் அமையும். விமர்சனங்களை தகர்த்து வெற்றியை நோக்கி பயணித்தால் ஏற்றம் நிச்சயம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். பெரிய தொகையை ஈடுபடுத்துவதில் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் அக்கறையுடன் செயல்படுவது உத்தமம். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனைகள் தீரும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு யோகம் நிறைந்த நாளாக அமைய போகிறது. இதுவரை தடைப்பட்டுக் கொண்டிருந்த சில காரியங்களுக்கு வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் புதிய நபர்களின் அறிமுகத்தை பெற போகிறீர்கள். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகளும் அமையும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் ஏற்றம் பெறலாம். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பண ரீதியான விஷயத்தில் எச்சரிக்கை தேவை. தேவையற்ற இடங்களுக்கு பயணம் செய்வதை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் மீது சுமத்தப்பட்ட வீண் பழிகள் மறையும். உங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூல பலன் உண்டாகும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே நடைபெறும் முக்கிய பேச்சுவார்த்தைகளை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் போட்டியாளர்களை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். வாகன ரீதியான வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு நினைத்ததை நடத்திக் காட்டும் யோகமுண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பெரிய தொகையில் கவனம் தேவை. உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சுயமாக எடுக்கும் முடிவை விட ஒன்றுக்கு இரண்டு முறை ஆலோசனை செய்து விட்டு எடுப்பது நல்லது. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகளை பெறுவீர்கள். உங்கள் மனதில் இருந்து வந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் அமையும் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணங்கள் மூலம் அனுகூல பலன் உண்டாகும். தொலை தூர இடங்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் உடைய ஆதரவு குறைய வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற நபர்களின் அறிமுகத்தை தவிர்த்துக் கொள்வது உத்தமம். மேலதிகாரிகளின் மூலம் சில வேலை நுணுக்கங்களை கற்றுக் கொள்ள வாய்ப்புகள் அமையும். ஆரோக்கியம் கவனம் தேவை.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு எட்டாத விஷயத்தைக்கூட எட்டிப்பிடிக்கும் பாக்கியம் அமையும். உங்கள் சுய உழைப்பு மற்றவர்களை வியப்படையச் செய்யும். நீண்டகால பாக்கிகளை வசூல் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்கள் இடம் கவனம் தேவை. தேவையற்ற வார்த்தைகளை விட்டு விட்டு பின்னர் யோசிப்பதை தவிர்க்கவும். பேச்சில் இனிமை இருந்தால் நன்மைகள் நடக்கும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இனிய நாளாக அமைய போகிறது. சுபகாரியத் தடைகள் விலகி நன்மைகள் நடைபெறும். நீங்கள் தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புத வாய்ப்புகள் உண்டு. நல்ல செய்திகளை எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மனதிற்குப் பிடித்த நல்ல வேலை அமைய போகிறது. சுயதொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் கூடுதல் அக்கறையுடன் இருப்பது நல்லது.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு எதிலும் கவனம் தேவைப்படக்கூடிய நாளாக இருக்கிறது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் முன்பின் தெரியாத புதிய நபர்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் செலுத்துவது உத்தமம். உத்யோகத்தில் இருப்பவர்கள் தங்கள் பணிகளைக் குறித்த நேரத்தில் செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. புதிய புதிய வாய்ப்புகளை பெறும் யோகமுண்டு. சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன்-மனைவிக்குள் தேவையற்ற சண்டை சச்சரவுகளை விலக்கி வைப்பது உத்தமம். கூடுமானவரை பொறுமை காத்தால் மனநிம்மதி கிடைக்கும். குடும்பத்தில் இருக்கும் பெரிய நபர்களுடைய ஆசிர்வாதம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.