மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான நல்ல பலன்கள் கிடைக்க போகிறது. உங்களுடைய பலநாள் முயற்சியினால் சுப பலன்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு விருத்தி உண்டாகும். வாடிக்கையாளர்கள் இடத்தில் இனிமையாகப் பேசுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் அதிகரிக்கும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் இருக்க கூடிய முக்கிய முடிவுகள் சாதகப் பலனை கொடுக்கும் என்பதால் தயக்கம் கொள்ள தேவை இல்லை. சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பை இழக்க நேரிடும் என்பதால் முன் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் இருப்பது நல்லது. அவசர முடிவுகள் ஆபத்தை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வளர்ச்சிப் பாதையை நோக்கிய பயணம் நீடிக்கும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பதால் டென்ஷன் ஏற்படலாம். சுய கட்டுப்பாடு அவசியம்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையாவிட்டாலும் லாபம் கொடுக்கும் வகையில் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இந்த நாள் பழைய இழுபறியில் இருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். உத்யோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை தைரியமாக முன் வைப்பீர்கள். பயணங்களில் கவனம் தேவை.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். தேவையற்ற எதிர்பார்ப்புகளை தவிர்த்து வருவது வரட்டும் என்று இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சில மாற்றங்கள் நன்மைகளை கொடுக்கும். தனிப்பட்ட சுபகாரிய முயற்சிகளில் வெற்றி வாகை சூடுவீர்கள்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பேச்சால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தொலை தூர இடங்களில் இருந்து சுபச் செய்திகள் வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வாகன ரீதியான வீண் விரையங்கள் ஏற்படும் என்பதால் பராமரிப்பு செய்வது நல்லது. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பேச்சில் இனிமை தேவை. தேவையற்ற முன் கோபங்களை கட்டுப்படுத்துவது நல்லது. இந்த ஒரு முக்கிய முடிவையும் சிந்தித்து எடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். ஆரோக்கியம் முன்னேற்றம் இருக்கும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிரடியான திடீர் திருப்பங்கள் ஏற்படும். கணவன் மனைவியிடையே ஒற்றுமைக்கு குறைவிருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் எடுத்த வேலையை சரியாக முடித்து விடுவது நல்லது. தடைப்பட்ட வேலைகள் தாமதமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களிடம் மதிப்பு உயரும். சிலருக்கு பொன், பொருள் சேர்க்கை ஏற்படும்.
தனுசு:
தனுஷில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய விடாமுயற்சி உங்களுக்கு நல்ல பலன் கொடுக்க இருக்கிறது. எதிலும் வெற்றி வாகை சூடுவீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் வெளிவட்டார இடங்களில் பேச்சில் கவனம் செலுத்துவது நல்லது. உங்களுடைய நேர்மைக்கு உரிய பரிசு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய அனுபவ அறிவு பல அனுகூலமான பலன்களை கொடுக்க இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நவீன உத்திகள் கையாளும் திறன் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு சக பணியாளர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சகோதர, சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். சமூக அந்தஸ்து உயரும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. தேவையற்ற இடங்களில் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நலம் தரும். தொழில், வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உங்களின் எதார்த்தமான அணுகுமுறை மற்றவர்களை கவரும் வண்ணம் அமைப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தேவையற்ற அலைச்சலை தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தங்களுடைய பலம் தெரிய ஆரம்பிக்கும். ஒரு விஷயத்தில் ஈடுபாட்டுடன் இல்லாமல் பல விஷயங்களை கற்றுக் கொள்ளும் ஆர்வம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் சில தொல்லைகள் வந்து சேரலாம். ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது