மேஷம்:
அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். பிற்பகலுக்குமேல் மனதில் இனம் புரியாத கலக்கம் உண்டாகும். பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும் என்பதால், மற்றவர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை.
ரிஷபம்:
இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். லாபமும் அதிகம் கிடைக்கும்.
மிதுனம்:
புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வெளியூர்ப் பயணம் தவிர்க்கவும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.
கடகம்:
அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதன் காரணமாக கடன் வாங்கவும் நேரிடும். மற்றவர்களிடம் பேசும்போது பொறுமை மிக அவசியம்.
சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்று சந்திராஷ்டமம் என்பதால் அதிகரிக்கும் செலவுகளால் சிலர் கடன் வாங்கவும் நேரும். வியாபாரத்தில் கூடுதல் முதலீடு செய்யவேண்டி வரும். பிற்பகலுக்குமேல் அலுவலகத்தில் வேலை அதிகரிப்பதன் காரணமாக நீங்கள் செய்ய நினைத்த சில சொந்த வேலைகளை தள்ளிப்போட நேரும்.
கன்னி:
இன்று நீங்கள் அன்றாடப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். பிற்பகலுக்குமேல் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். தேவைப்படும் பணம் கடனாகக் கிடைக்கும். நண்பர்கள் உங்கள் முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.
துலாம்:
அதிகாரிகளின் சந்திப்பும் காரிய அனுகூலமும் உண்டாகும். வீடு, மனை வாங்க நினைத்த முயற்சிக்கு இன்று சாதகமான முடிவு ஏற்படும். வங்கிக் கடனுக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்குச் சாதகமான பதில் வரும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.
விருச்சிகம்:
இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். சகோதர வகையில் எதிர்பார்க்கும் ஆதரவு கிடைக்கும். நிலம், மனை வாங்கும் முயற்சி நல்லமுறையில் முடியும். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். பிற்பகலுக்குமேல் தேவையற்ற அலைச்சல் உங்களை சோர்வு அடையச் செய்யும். திட்டமிட்டு அலைச்சலைக் குறைக்க முயற்சிக்கவும்.
தனுசு:
வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரும். மனம் உற்சாகமாகக் காணப்படும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர் மற்றும் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
மகரம்:
உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்ற சற்று அலைச்சலும் சோர்வும் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும்.
கும்பம்:
உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. தேவையற்ற எண்ணங்களால் மனதில் இனம் தெரியாத கலக்கம் உண்டாகும். மற்றவர்களால் மன அமைதி குறையக்கூடும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். தாய் வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.
மீனம்:
பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வாழ்க்கைத் துணை வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். சகோதரர்கள் உங்கள் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு உதவி செய்வார்கள்.