மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கையும் தைரியமும் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. எந்த ஒரு விஷயத்திலும் துணிந்து முடிவு எடுத்து அதில் வெற்றியும் காண்பீர்கள். முக்கியமான பொறுப்புகளை அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதுப் புது விஷயங்களை கற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் அமையும். உற்சாகத்தோடு வேலை செய்வீர்கள். வேலை செய்யுமிடத்தில் புகழையும் பாராட்டையும் பெறுவீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு காத்துக் கொண்டிருக்கின்றது.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுமாரான நாளாகத்தான் இருக்க போகின்றது. முடிவெடுப்பதில் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும். வீட்டில் உறவினர்களின் வருகை இருக்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். செலவுக்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் மறைமுக எதிரிகளால் சின்ன சின்ன பிரச்சனை வந்து போவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் சவால் நிறைந்த நாளாகத்தான் இருக்கும். எதையுமே ஒன்றுக்கு பலமுறை முயற்சி செய்தும் போது தான் வெற்றி கிடைக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு கிட்டும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் புதிய அங்கீகாரம் கிடைக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பேச்சாற்றல் அதிகரிக்கும். எதையும் சாதுரியமாக பேசியே சமாளிக்கப் போகிறீர்கள். வாய் ஜால வித்தையர் என்ற பட்டமே உங்களுக்கு கிடைக்கும் என்றால் பாருங்களேன். வாகனத்தில் செல்லும்போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சந்தோஷமான நாளாகத்தான் இருக்க போகின்றது. உங்களுடைய முன்கோபத்தை குறைத்துக் கொள்ளவேண்டும். எல்லோரிடத்திலும் அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும். கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள். உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களாக இருந்தாலும் அவர்களிடத்தில் கொஞ்சம் அனுசரணை இன்னைக்கு கட்டாயம் இருக்க வேண்டும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சந்தோஷமான நாளாகத்தான் இருக்க போகின்றது. கிடப்பில் கிடந்த வேலைகளெல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிடும். அரசாங்க வேலையில் கொஞ்சம் இழுபறி இருக்கும். சொந்தத் தொழிலில் நல்ல லாபம் உண்டு. அதிக வட்டிக்கு கைநீட்டி கடன் வாங்காதீர்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய முதலீடு செய்து தொழிலை விரிவுபடுத்தலாம். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கும். உற்சாகத்தோடு வேலை செய்து பாராட்டையும் பெறுவீர்கள்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். சேமிப்பு கரையும் போது கஷ்டம் வரும். வேறு வழி கிடையாது. செலவு செய்துதான் ஆக வேண்டும். மற்றபடி குடும்பத்தில் சந்தோஷம் நிறைவாக இருக்கும். பிள்ளைகளால் மனநிறைவு கிடைக்கும். மரியாதை உயரும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனநிறைவான நாளாக இருக்கப் போகின்றது. குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கும். வேலை செய்யும் இடத்தில் எக்காரணத்தைக் கொண்டும் பொய் சொல்ல வேண்டாம். உங்களுக்கு பிரச்சனையே வரும் என்றாலும், உண்மையை சொல்லி மாட்டிக் கொள்ளுங்கள். அதனால் தவறு கிடையாது. ஒரு பொய்யை மறைக்க பல பொய் சொல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.
கும்பம்:
கும்ப ராசி காரர்களுக்கு இன்றைய நாள் சஞ்சலம் நிறைந்த நாளாகத்தான் இருக்க போகின்றது. கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை வர வாய்ப்புகள் உள்ளது. ஆகவே வாக்குவாதம் வேண்டாம். யாராவது ஒருவர் சரண்டர் ஆவது தான் ஒரே வழி. முன் கோபம் வரும் போது மனதை அமைதிப்படுத்த தியானம் செய்து பழகுங்கள்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுமை அவசியம் தேவை. கோபப்படாதீங்க. உங்களுடைய வேலையை முன் பின் நேரமானாலும், நீங்களே செய்து முடித்து விடுங்கள். யாரை நம்பியும் ஒப்படைக்காதீர்கள். உங்களுடைய பெயர் கெட்டு போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எப்போதுமே பேச்சில் கொஞ்சமாக தேன் சேர்த்துக்கொள்ளுங்கள். எப்பவும் காரசாரமாக பேசுவது பிரச்சினைகளை கொண்டு வந்து சேர்க்கும்.