மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் வரக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்கள் தொட்டதெல்லாம் வெற்றியாக கூடிய இனிய நாளாக இருப்பதால் நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடும் சோதனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே பொறுமையுடன் எதனையும் கையாளுங்கள்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கவலைகள் மறைந்து மகிழ்ச்சியுடன் இருக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பக்தி பெருக்கு அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய நட்பு மலரும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தெளிவான சிந்தனை இருக்கும். நீங்கள் எடுத்து வைக்கும் முயற்சிகளில் வெற்றியை அடைவீர்கள். கணவன் மனைவிக்குள் தேவையற்ற சந்தேகங்களை தவிர்ப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும் என்பதால் ஆடம்பரம் தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடமையிலிருந்து பின்வாங்காமல் இருப்பது நல்லது. அலட்சியம் பேரிழப்புகளை ஏற்படுத்தும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகள் சூழ்ச்சிகளை புரிய கூடும் என்பதால் விழிப்புணர்வு தேவை. ஆரோக்கியம் மேம்படும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முயற்சிகள் தடையில்லாமல் வெற்றி அடையும் இனிய நாளாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ள நீங்கள் செய்ய நினைத்ததை முழுமூச்சாக செய்து காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பெருமை உண்டாகும். கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நன்மைகள் நடைபெறக்கூடிய இனிய நாளாக இருக்கிறது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வகையில் லாபம் பெருகும். வாடிக்கையாளர்களிடத்தில் நன்மதிப்பு ஏற்படும். உபயோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் பரிசு கிடைக்கும். தொலைதூர இடங்களில் இருந்து மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுப செய்தி கிடைக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறப்பான நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் எதை நினைத்து இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு கொண்டிருந்தீர்களோ அதற்கான பயனை அனுபவிக்க கூடிய காலமாக இருக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு விடா முயற்சி வெற்றியை கொடுக்க இருக்கிறது. உத்தியோகஸ்தர்கள் மனநிறைவு பெறுவீர்கள். ஆரோக்கியம் முன்னேற்றம் காணும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையான ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் பிணக்குகள் நீங்கும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் அவ்வபோது வந்து மறையும் என்பதால் உணவு கட்டுப்பாடு மேற்கொள்வது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற பயம் நீங்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுபகாரிய தடைகள் விலகும் நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் சிறு சிறு வாக்குவாதங்கள் பெரிதாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உயர்வு உண்டாகும். புதிய பணியாட்களை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டுகள் பெறும் வாய்ப்புகள் உண்டு.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புது உற்சாகம் தென்படும் நல்ல நாளாக இருக்கிறது. இதுவரை இருந்து வந்த குழப்பங்கள் மாறும். குடும்பத்தில் இருக்கும் மனக்கசப்புகள் தீரும். வெளியிடங்களுக்கு பயணம் செல்ல வாய்ப்புகள் அமையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பங்குதாரர்களுடன் இருந்து வந்த மன கசப்புகள் தீரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்கள் திறமையை நிரூபித்து காட்டுவீர்கள்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் தீரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு தேவை. தேவையற்ற சிந்தனைகளில் இருந்து மீண்டும் வருவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உழைப்பை ஆயுதமாக பயன்படுத்த வேண்டிய காலமாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கவன சிதறல் ஏற்படும் எனவே கவனம் தேவை.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். நண்பர்களின் ஆதரவை பெரும் இனிய நாளாக இருக்கிறது. உற்றார், உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில் இருக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கூடுதல் ஒத்துழைப்பை நல்குவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடினமான வேலையும் சுலபமாக முடியும்.