மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான நல்ல பலன்கள் கிடைக்க கூடியதாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வருபவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. உத்யோகத்தில் அனுகூல பலன் கிடைக்கும். சமயோசிதமாக செயல்படுவதன் மூலம் வெற்றி அடையலாம். சுறுசுறுப்புடன் செயலாற்றக்கூடிய நாளாக இருக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு இறை வழிபாடுகளில் அதிக ஆர்வம் உண்டாகும். பிள்ளைகள் வழியில் பல வகையிலும் நன்மைகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாகன ரீதியான விஷயங்களில் கவனம் தேவை. எதிர்பாராத மறைமுக செலவுகள் ஏற்படலாம். ஆரோக்கியம் மேம்படும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் அமையும். வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஆடம்பரத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பணவரவு அதிகரித்தாலும் அதற்குரிய செலவுகள் வந்து சேரும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தினருடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் பொறுப்பாக செயல்படுவது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம் எனவே கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் எதிர்பாராத நபர்களை சந்திக்கும் வாய்ப்புகள் உண்டு.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கடன் பிரச்சினைகள் குறையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் சற்று சிந்தித்து முடிவு எடுப்பது நல்லது. பூர்வீக சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சுபகாரியத் தடைகள் விலகி குடும்ப ஒற்றுமை மேலோங்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நிம்மதி இல்லாதது போல் ஒரு உணர்வை ஏற்படுத்திக் கொள்வீர்கள். பெரிதாக எதையும் போட்டு அலட்டிக் கொள்ளாமல் வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் மன உளைச்சலில் இருந்து விடுபட இருக்கிறீர்கள்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகளுக்கு அதிகம் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபார ரீதியான பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தொலைதூர நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் உண்டு. வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் தரக்கூடிய அமைப்புகள் இருப்பதால் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய நண்பர்கள் மூலம் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மனக் குழப்பங்கள் தீரும். பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தீட்டிய திட்டங்களை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவது நல்லது. உங்களுடன் இருந்து கொண்டே உங்களுக்கு எதிராக சிலர் செயல்பட வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவியிடையே புரிதல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வெற்றி அடைய கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. சுபகாரியத் தடைகள் விலகும். தொழில் மற்றும் வியாபார ரீதியான புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள். அரசு வழி காரியங்கள் அனுகூல பலன் கொடுக்க இருக்கிறது. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் லாபம் உண்டு. பிள்ளைகள் மூலம் நல்ல நிகழ்வுகள் நடைபெறும். உற்சாகத்திற்கு குறைவிருக்காது.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் மூத்தவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான பண வரவு சிறப்பாக இருக்கும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உங்களுடைய இரக்க குணம் உங்களுக்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் பல பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுவார்கள். ஆரோக்கியம் சீராகும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தின் மீது அக்கறையுடன் காணப்படுவீர்கள். கணவன் மனைவி உறவுக்கு இடையே இருந்து வந்த சிறுசிறு சண்டை சச்சரவுகள் நீங்கி பரஸ்பர அன்பு, ஒற்றுமை மேலோங்கி காணப்படும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும் வகையில் அமைய இருக்கிறது. இறை வழிபாடுகளில் மீது ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு.