மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான நல்ல பலன்கள் உண்டு. புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதக பலன் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு விருத்தி உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற விமர்சனங்களை தவிர்ப்பதன் மூலம் மன அமைதி காணலாம்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி உறவுக்கு சிக்கல் வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை. ஆரோக்கியம் மேம்படும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகளுக்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைக்கும். விடா முயற்சிக்கு உரிய வெற்றி உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகள் வலுவாக வாய்ப்புகள் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு சாதுரியமாக செயல்படுவதன் மூலம் நன்மைகள் உண்டாகும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய கடமையில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வாகன ரீதியான பயணங்களின் போது கவனம் தேவை. கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துணிச்சலாக சில முடிவுகளை எடுக்கக் கூடிய தைரியம் பிறக்கும். உங்களுடைய முடிவுகளில் இருந்து பின் வாங்காமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பண நெருக்கடி ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் பொறுப்பு சுமை அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நேர்மறையான சிந்தனையுடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் உடல் சோர்வை ஏற்படுத்தும். தேவையான ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு இடங்களில் கூடுதல் வரவேற்பு காத்திருக்கும். திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உங்களுடைய பலநாள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு சந்தர்ப்பங்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மனதை ஒருமுகப்படுத்துவதன் மூலம் ஏற்றம் காணலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும் என்றாலும் உற்சாகத்திற்கு குறைவிருக்காது.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை அடைய கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் பழைய கடன் பாக்கிகள் வசூலாகும் யோகமுண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரித்து காணப்படும். வெளியிடங்களில் யாருக்கும் வக்காலத்து வாங்காமல் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான நல்ல பலன்கள் கிடைக்க கூடிய நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மேன்மை உண்டாகும். கணவன் மனைவி இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் அமையும். உங்களுடைய திறமையை நிரூபிக்க சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனம் மகிழும் படியான நல்ல நிகழ்வுகளை காண இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அனுகூலமான நல்ல பலன்கள் உண்டு. கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவி உறவுக்கு இடையே புரிதல் உண்டாகும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய கடமையை நிறைவேற்ற இடையூறுகள் ஏற்படும். சாதகமற்ற அமைப்பு என்பதால் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பண நெருக்கடி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் முன் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முயற்சிகளுக்கு பக்க பலமாக குடும்பத்தினர் இருப்பார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளால் மூலம் அனுகூலமான நல்ல பலன்கள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி உறவுக்கு இடையே இருந்து வந்த மனக் குழப்பங்கள் தீரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு