மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் நிதானமாக செய்வது நல்லது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. சுபகாரிய பேச்சு வார்த்தையில் வெற்றி காண்பீர்கள். சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெளியிட பயணங்களின் போது கவனம் தேவை. உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு பெருகும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமைய இருக்கிறது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களுடைய சந்திப்பு அமையும். உத்தியோகஸ்தர்கள் சக போட்டியாளர்கள் மத்தியில் சாதித்துக் காட்டுவீர்கள். திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். அவர்களின் தேவை அறிந்து பூர்த்தி செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்களில் ஈடுபடும் பொழுது கவனம் தேவை. துறை சார்ந்த நிபுணர்கள் நிபுணர்களின் ஆலோசனை பெற்றுக் முடிவுகளை எடுப்பது உத்தமம். ஆரோக்கியம் கவனம் தேவை.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஒரு சில தடைகள் ஏற்பட்டாலும் வெற்றி உங்களுக்குத்தான். சுபகாரிய முயற்சிகளில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது. புதிய சொத்துக்கள் அல்லது பொருட்கள் வாங்கும் பொழுது கவனம் தேவை. உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற விமர்சனங்கள் எழலாம் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற சந்தேகத்தால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் கூடுமானவரை சிந்தித்து செயலாற்றுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் பெரிய தொகையை ஈடுபடுத்தும் போது கவனமுடனிருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். திடீர் மாற்றம் அனுகூல பலன் தரும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சதா வேலை வேலை என்று வேலை பின்னாடி அலைந்து கொண்டே இருப்பதில் இருந்து ஓய்வு தேவை. கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். நீண்ட நாள் சந்திக்க வேண்டிய ஒருவரை சந்திப்பீர்கள். வாகன ரீதியான வீண் விரயங்கள் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருப்பவர்கள் ஆலோசனையை தேவைப்படக்கூடிய நாளாக இருக்கும். சுய முடிவை விட மற்றவர்களுடைய ஆலோசனையின் பெயரில் எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் கொடுக்கும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்து வந்த காரியம் ஒன்று நடக்க இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் தேவை. ஆரோக்கியம் மேம்படும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தடைகளைத் தாண்டிய வெற்றியை காண கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொலை தூர இடங்களிலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் உண்டாகும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். முன்பின் தெரியாதவர்களின் அறிமுகத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் சுயமாக சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். ஆரோக்கியம் சீராகும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் நினைத்த விஷயம் ஒன்று நல்லபடியாக நடக்கும். பழைய நினைவுகளை அசைபோட்டு பார்ப்பதற்கு உரிய நேரம் அமையும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூல பலன் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கவன சிதறல் ஏற்படலாம் என்பதால் எச்சரிக்கை தேவை. சுய தொழிலில் உள்ளவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் எண்ணத்தில் இருப்பீர்கள்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் ஒரு தெளிவு உண்டாகக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. இதுவரை குழப்பத்தில் இருந்த நீங்கள் எடுக்கும் முடிவுகளில் இருந்து பின் வாங்காமல் இருப்பது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சாதக பலன் பெறுவீர்கள்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நல்ல நாளாக அமைய இருக்கிறது. வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் அனுகூல பலன் உண்டாகும். கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். பொருளாதார ரீதியான பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து முடிவெடுப்பது நல்லது