மேஷம்:
மேஷ ராசியினர் இன்றைய தினம் எதிர்பார்த்த காரியங்களில் வெற்றி பெறுவார்கள். சிலருக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் ஏற்படும், உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும், வாழ்க்கைத் துணையால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.
ரிஷபம்:
ரிஷப ராசியினர் இன்றைய தினம் ஈடுபடும் காரியங்களில் சற்று தாமதித்த பின்பே வெற்றி பெறுவார்கள். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல் உண்டாகும். பிறருடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. கொடுக்கல் – வாங்கலில் சராசரியான நிலையே இருக்கும்.
மிதுனம்:
மிதுன ராசியினர் இன்றைய தினம் குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உங்களின் நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். இழுபறியாக இருந்த சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
கடகம்:
கடக ராசியினர் இன்றைய தினம் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அடைவார்கள். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும், வெளியூர் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் எதுவும் ஈடுபட வேண்டாம். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்று உறவினர்களுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் தீரும். குடும்பத்தில் இருப்பவர்களின் ஆதரவு உண்டு. உடல், மனதில் புதிய உற்சாகம் உண்டாகும். சிலர் ஆன்மிகத் தலங்களுக்கு சென்று வருவார்கள். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
கன்னி:
கன்னி ராசியினர் இன்றைய தினம் பிறருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். வெளியூர் பயணங்களை ஒத்திவைக்க வேண்டிய சூழல் உண்டாகும். உடன் பிறந்தவர்களுடன் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் சுமாரான நிலையே இருக்கும்.
துலாம்:
துலாம் ராசியினர் இன்றைய தினம் தாமதித்த காரியங்களில் வெற்றி பெறுவார்கள். நண்பர்கள் அல்லது உறவினர்களால் சிலருக்கு தர்மசங்கடம் ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர்பாராத வீண் செலவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவருக்கு விரும்பியபடி பணி உயர்வு, பணி இடமாற்றம் கிடைக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினர் இன்றைய தினம் பிறருடன் வீண் விவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. சிலருக்கு தங்கள் பணி தொடர்பான வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். தொழில், வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள்.
தனுசு:
தனுசு ராசியினர் இன்றைய தினம் தேவைக்கேற்ற பணவரவை கிடைக்கப் பெறுவார்கள். உடல்நலம் சிறப்பாக இருக்கும். பணியிடங்களில் பிறருடன் வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். வெளியூர், வெளிநாடுகளில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும்.
மகரம்:
மகர ராசியினர் இன்றைய தினம் பொருளாதார ரீதியிலான ஏற்றம் காண்பார்கள். குடும்பத்தில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, ஒற்றுமை மேலோங்கும். சிலர் புதிய வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் ஈடுபடுவார்கள். கலைஞர்களுக்கு சற்று தாமதத்திற்கு பிறகு மிக சிறப்பான வாய்ப்புகள் அமையும்.
கும்பம்:
கும்ப ராசியினர் இன்றைய தினம் எதிர்பாராத நல்ல செய்தி கிடைக்கப் பெறுவார்கள். நேரடி மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். தொழில், வியாபாரம் மிக அமோகமாய் நடைபெறும். தம்பதிகளிடையே ஒற்றுமை ஏற்படும். பிறருக்கு கொடுத்த கடன் தொகை மீண்டும் வந்து சேரும்.
மீனம்:
மீன ராசியினர் இன்றைய தினம் நண்பர்கள் அல்லது தூரத்து உறவினர்களால் லாபம் பெறுவார்கள். அரசு தொடர்பான காரியங்களில் வெற்றி கிடைக்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத மருத்துவச் செலவுகள் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.